சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குநர் இவரா?

Inbanithi Hero Debut: தமிழில் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகராக நடித்து தற்போது, தமிழக துணை முதலமைச்சராக இருந்துவருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் மகன் இன்பநிதி சினிமாவில் கால் பதிக்கவுள்ளார். இவர் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குநர் இவரா?

ஹீரோவாக அறிமுகமாகும் இன்பநிதி

Published: 

09 Oct 2025 17:37 PM

 IST

கடந்த 2012ம் ஆண்டில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி (Oru Kal Oru Kannadi) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin). இந்த படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமான இவர், தொடர்ந்து சினிமாவில் பல படங்களில் நடித்து வெற்றிபெற்றிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன்னன் (Mamannan). கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார். இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அரசியலில் முழுவதுமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில், இவரின் மனைவி கிருத்திகா உதயநிதி (Krithika Udhayanidhi) மட்டும் சினிமாவில் படங்களை இயக்கிவருகிறார். அந்த வகையில் இவர்களின் மகன் இன்பநிதி (Inbanithi) சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. சமீப காலமாக இவர் நடிப்புப்பட்டறையில், நடிகருக்கான பயிற்சிப் பெறுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்தது. அந்த வகையில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: செல்வராகவனின் ‘மெண்டல் மனதில்’ திரைப்படத்தின் நிலை என்ன? அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

ஹீரோவாக அறிமுகமாகும் இன்பநிதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன், இன்பநிதி தனது தந்தையை போலவே சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இவர் அறிமுகமாகும் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ்தான் (MariSelvaraj) இயக்கவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் பைசன் திரைப்படமானது தயாராகியுள்ள நிலையில், வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக தனுஷ் மற்றும் கார்த்தியின் படத்தை இயக்குவதாக கூறப்பட்டநிலையில், இந்த படங்களுக்கு முன் இன்பநிதியின் படத்தை இயக்குவதாக கூறபடுகிறது.

இதையும் படிங்க: விஜய், திரிஷாவுக்கு பிறகு நயன்தாரா வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இறுதி படத்தை மாரிசெல்வராஜ் இயக்கி வெற்றி கொடுத்திருந்த நிலையில், அவரின் மகன் இன்பநிதியின் முதல் படத்தையும் இயக்குநர் மாரிசெல்வராஜ்தான் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பைசன் படம் குறித்து மாரிசெல்வராஜ் வெளியிட்ட பதிவு :

இயக்குநர் மாரிசெல்வராஜின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரம் கதநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படமானது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.