Suriya: சமந்தாவுடன் ரொமாண்டிக் சீன்.. அவங்க என்ன பண்ணணுமோ அதில் தெளிவா இருப்பாங்க – சூர்யா சொன்ன சம்பவம்!

Suriya About Samantha: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து அசத்திவருகிறார். இவரின் நடிப்பில் கருப்பு, சூர்யா46 என இரு படங்ககள் தயாராகிவருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, சமந்தாவுடன் நடித்தது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

Suriya: சமந்தாவுடன் ரொமாண்டிக் சீன்.. அவங்க என்ன பண்ணணுமோ அதில் தெளிவா இருப்பாங்க - சூர்யா சொன்ன சம்பவம்!

சூர்யா மற்றும் சமந்தா

Updated On: 

10 Oct 2025 09:04 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் ரசிகர்களை ஈர்த்துவருபவர் சூர்யா (Suriya). இவருக்கு தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சூர்யா, தமிழ் மொழியையும் கடந்து தெலுங்கு மற்றும் மலையாள பட இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம்தான் சூர்யா46 (Suriya46). இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது ஐரோப்பாவில் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துவருகிறார். இந்த படத்தை அடுத்தாக சூர்யா, மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இது பற்றிய அதிகாரப்பூராவ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சூர்யா முன்பு ஒரு நேர்காணலில் நடிகை சமந்தாவுடன் (Samantha) நடித்தது பற்றி ஓபனாக பேசியிருந்தார். அதில் அவர் சமந்தாவுடன் ரோமாண்டிக் காட்சிகளில் நடித்த தருணம் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தல – தளபதியின் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண் பேச்சு!

நடிகை சமந்தா ரூத் பிரபு குறித்து பேசிய சூர்யா

அந்த நேர்காணலில் நடிகர் சூர்யா, “எனது 24 பட காட்சிகளில் சமந்தவுடனான ரோமான்ஸ் காட்சிகள் தொடர்பான வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. விக்ரம் குமார் இயக்கத்தில், நானும் சமந்தாவும் 24 படத்தில் நடித்திருந்தோம். இந்த படத்தில் வந்து, ஒரு ரோமாண்டிக் கடைசி இருந்தது. அந்த காட்சி எப்படி அமையவேண்டும் என இயக்குநர் விக்ரம் குமார் கூறியிருந்தார். அதுபோல அவரும் செய்து காண்பித்தார். அப்போதுதான் சமந்தா இது நன்றாக இருக்காது நான் வேறு ஒரு மாடலை ட்ரை பண்ணுகிறேன் எப்படி இருக்கிறது என பாருங்கள் என அவரே அந்த காட்சியில் தீவிரமாக இருப்பார்.

இதையும் படிங்க: காமெடி ட்ராமா பிடிக்குமா? அப்போ இந்தியில் இந்த பதாய் ஹோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்

எப்படி நடிக்கவேண்டும், எப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என சமந்தாவிற்கு நன்றாகவே தெரியும். அவரிடம் உறுதியாக கருத்து இருக்கும், அவரின் கருத்தும் மிகவும் நன்றாகவே இருக்கும். அவர் என்ன செய்யவேண்டும் என்பதை அவர் மிகவும் உறுதியாக இருப்பார், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாலே, முழுவதும் பாசிடிவ் எனர்ஜி பரவும், அவர் மிகவும் சக்திவாய்ந்த நபரும் ஆவார்” என நடிகர் சூர்யா முன்பு ஒரு நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு

நடிகை சமந்தா மற்றும் சூர்யா இணைந்து கிட்டத்தட்ட 2 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டில் வெளியான அஞ்சான் திரைப்படம் மற்றும் 2016ம் ஆண்டில் வெளியான 24 என்ற திரைப்படம் என இரு படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.