இந்த குழந்தைக்குதான் சூர்யா தங்க சங்கிலி போட்டாரா? வைரலாகும் வீடியோ
Suriya presents a gold chain to the child artist: நடிகர் சூர்யா முன்னதாக ஒரு குழந்தைக்கு தங்க சங்கிலி பரிசளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் அவர் தனது ரசிகரின் குழந்தைக்கு பரிசளித்தார் என்று கூறி வந்தனர்.

சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலின் தேதி உறுதியான பிறகு படத்தின் தேதியை உறுதி செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தினை இவ்வளவு நாளாக சூர்யா 46 என்றே அழைத்து வந்த நிலையில் இன்று தான் படத்தின் தலைப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் படத்தின் தலைப்பு மட்டும் இன்றி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு நிற்பது போல காட்டப்பட்டு இருந்தது. இந்தப் போஸ்டர் மற்றும் தலைப்பைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த குழந்தைக்குதான் சூர்யா தங்க சங்கிலி போட்டாரா?
இந்த நிலையில் நடிகர் சூர்யா முன்னதாக 46-வது படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு ஒரு குழந்தைக்கு தங்க சங்கிலி பரிசளிப்பது போல ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் ரசிகரின் குழந்தைக்கு சூர்யா பரிசளித்ததாக தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த குழந்தை படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்த குழந்தை என்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக மீண்டும் அந்த வீட்யோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… Ram Charan: பெடி திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ராம் சரண் – நகைச்சுவையுடன் வெளியான வீடியோ!
இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் வீடியோ:
Suriya — #VishwanathAndSons…👏🏼
pic.twitter.com/gupVYN50Dr— Movie Tamil (@_MovieTamil) March 2, 2026
Also Read… இந்த போட்டோவில் மகேஷ் பாபு கையில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவரின் முதல் தமிழ் படமே ஹிட்!