கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரிய வழக்கு – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Thug Life Movie: கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் தக் லைப் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட முடியவில்லை. படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பதட்டமான சூழல் நிலவ வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் படக்குழு தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரிய வழக்கு - தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

தக் லைஃப்

Published: 

09 Jun 2025 12:55 PM

 IST

கன்னட மொழி சர்ச்சையை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனின் (Actor Kamal Haasan) தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட பாதுகாப்பு கோரி படக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. கர்நாடக திரையரங்குகள் சங்கம், பிரிவு 32 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில், கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படத்தைத் திரையிட விரும்பும் தியேட்டர்களுக்கு சில எதிர்கட்சிகள் மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி தக் லைஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. முன்னதாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தை பாதுகாப்பு கோரி அணுகியபோது, ​​மிரட்டல் விடுத்தவர்களுடன் சமரசம் செய்து கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதாக மனுதாரர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு தர மறுத்த உச்ச நீதிமன்றம்:

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வைந்தது. அதில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கே. மிஸ்ரா, இந்த மனுவை இங்கே ஏன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்றும் மனுராரர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என்ற பயம் இருக்கிறது என்றால் தீயணைப்பு கருவிகளை பொருத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறித்தியுள்ளார்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி நடிகர் கமல் ஹாசன் சார்பில் வழங்கு தொடர்ந்த போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கமல் ஹாசனுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். மேலும் ஒரு மன்னிப்பு கேட்டாள் சரியாகும் விசத்திற்கு ஏன் இவ்வளவு ஈகோ காட்ட வேண்டும் என்றும் கமல் ஹாசனிடம் கேள்வி எழுப்பினர்.

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்த படக்குழு:

கர்நாடகாவின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குப் பிறகு தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை ஒத்தி வைத்தது படக்குழு. மற்ற மாநிலங்களில் எல்லாம் படம் கடந்த 5-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் படம் வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கமல் ஹாசனின் ரசிகர்கள் தக் லைஃப் படத்தைப் பார்க்க ஓசூருக்கு கூட்டம் கூட்டமாக சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகுமா இல்லை என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.