ரசிகரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்… வைரலாகும் போட்டோ
Superstar Rajinikanth Meets His Fan: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் ரசிகரை சந்தித்த போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் ஒவ்வொரு ஆண்டும் திரையரங்குகளில் படம் வெளியாகி வருகின்றது. இறுதியாக திரையரங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆக்ஷன் காட்சிகள் பார்த்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதனைத் தொடர்ந்து உடனே அடுத்தப் படமான ஜெயிலர் 2 படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்தி இயக்க உள்ளார். மேலும் நடிகர் கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்.




ரசிகரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்:
தொடர்ந்து படங்களில் பிசியக நடித்துவரும் ரஜினிகாந்த் அவ்வபோது தனது ரசிகர்களை சந்திப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படி மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி மக்களுக்கு சேவை செய்து வரும் ஒரு ரசிகரையும் அவரது குடும்பத்தினரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியையும் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் கிங் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது மாஸ் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Superstar #Rajinikanth personally called and appreciated a Fan and his family, who have been serving the people by offering 5-rupee parottas in Madurai..❣️ Also Thalaivar gifted him a gold chain..🤝🤩 pic.twitter.com/9OnLnDQHlr
— Laxmi Kanth (@iammoviebuff007) January 25, 2026
Also Read… அஜித் குமாரின் 64-வது படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்? வைரலாகும் தகவல்