மகராசி சீரியல் நடிகை வீட்டில் விசேசம்… வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

Magarasi Serial Actress Mounika Devi: தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல்களில் ஒன்று மகராசி. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மௌனிகா. இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மகராசி சீரியல் நடிகை வீட்டில் விசேசம்... வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

மௌனிகா தேவி

Published: 

15 Apr 2026 14:52 PM

 IST

தமிழ் சினிமாவை பொருத்தாரை ரசிகர்கள் படங்களுக்கு அதிக அளவில் வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர். சின்னத்திரையில் வருகைக்கு முன்பு தமிழ் சினிமாவில் வாரம் வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தான் ரசிகர்களிடையே பொழுதுபோக்கு விசயமாக இருந்தது. ஆனால் வாரம் வாரம் படங்கள் வெளியானாலும் அதனை அனைவராலும் திரையரங்கிற்கு சென்று பணம் கொடுத்து பார்க்க முடியாது. இப்படி இருக்கும் சூழலில் தான் சின்னத்திரையின் வருகை தமிழ் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகத் தொடங்கியதும் அதன் பார்வையாளர்களும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் காலை 9 மணி தொடங்கி இரவு 11 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதனைப் பார்க்கவும் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல வெள்ளித்திரையில் உள்ள நடிகர்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது போல சின்னத்திரையில் உள்ள நடிகர்களுக்கும் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். மேலும் சின்னத்திரை நடிகர்களை ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களைப் போலவே பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சின்னத்திரை நடிகர்கள் அவர்களின் சொந்த வாழ்க்கையில் நடைபெறும் விசயங்களை சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து வருவதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கர்பத்தை அறிவித்த மகராசி சீரியல் நடிகை – வாழ்த்தும் ரசிகர்கள்:

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் அதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக உள்ளது மகராசி. இந்த சீரியலில் நடித்த நடிகை மௌனிகா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனியும் இதனை ரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது என்றும் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… வருண் தவான், பூஜா ஹெக்டே – மிருணாள் தாகூரின் புது படம் – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் டீசர்!

நடிகை மௌனிகா தேவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… 10 ஆண்டுகளைக் கடந்தது தெறி படம்… நன்றி தெரிவித்து எக்ஸ் பதிவிட்ட அட்லி

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி