Jana Nayagan : தளபதி விஜய்யின் ஜன நாயகனில் ரசிகர்களுக்குப் பல சர்ப்ரைஸ் இருக்கும் – நடிகர் ஸ்ரீநாத் பகிர்ந்த தகவல்!
Jana Nayagan Movie Updates : தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த திரைப்படம் விஜய்யின் இறுதி படம் என்பதால் பல எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரசிகர்களுக்குப் பல சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என நடிகர் ஸ்ரீநாத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத்தின் (H. Vinoth) இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவாகிவருவது ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படம். இந்த படமானது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) 69வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனமானது பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) தீவிரமாக இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படமானது விஜய்யின் இறுதி படம் என்று கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஜன நாயகன் படத்தில் தென்னிந்தியப் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஸ்ரீநாத் (Srinath) , ஜன நாயகன் படத்தில் நடித்தது பற்றியும், ரசிகர்களுக்கு அப்படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார். அதில் அவர் பேசியதை பற்றிப் பார்க்கலாம்.




ஜன நாயகன் படத்தின் சர்ப்ரைஸ் குறித்தது நடிகர் ஸ்ரீநாத் பேச்சு
அந்த நேர்காணலில் கலந்துகொண்ட ஸ்ரீநாத்திடம் ஜன நாயகன் படம் தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர், “நான் ஜன நாயகன் படத்தில் கேமியோ போல் சிறு வேடத்தில் நடித்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார். மேலும் அவரிடம் , விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் இப்படத்தில் மற்ற நடிகர்களும் நடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது அதை பற்றி எதாவது கூறுங்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ஸ்ரீநாத், “ஒருவேளை அவ்வாறு கூட இருக்கலாம், நானும் தளபதியின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் இருந்தேன், அதுவாகக் கூட இருக்கலாம்.
ஒருவேளை இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகர்கள் நடித்திருக்கலாம், அது என்ன என்பதைப் பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஜன நாயகன் படத்தில் விஜய்யின் ரசிகர்களுக்குப் பல சர்ப்ரைஸ் இருக்கிறது. ஆனால் அதை ஓபனாக சொல்ல முடியாது. விரைவில் இதை பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று நினைக்கிறேன்” என நடிகர் ஸ்ரீ நாத் பேசியிருந்தார்.
ஜன நாயகன் டீசர் சாதனை
32.4M+ cumulative digital views in 24 hours 🔥
Highest viewed glimpse in Kollywood in 24 hours 💥#HBDThalapathyVijay #JanaNayaganTheFirstRoar ▶️ https://t.co/Q981uzk8jA#JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju… pic.twitter.com/SGYPVIoH0T
— KVN Productions (@KvnProductions) June 22, 2025
கடந்த 2025, ஜூன் 22ம் தேதியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வெளியான 15 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் முடிவில் சுமார் 32 .4 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருந்தது. கோலிவுட் சினிமாவிலே வெளியாகி ஒரு நாளில் அதிகம் பார்வைகளைக் கடந்து ஜன நாயகன் சாதனை படைத்திருந்தது. படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.