AK64 Movie : அஜித் குமாரின் AK64.. இரண்டு நடிகைகளா? வைரலாகும் தகவல்!

Ajith Kumars AK64 Movie New Update : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகக் கலக்கி வருபவர் அஜித் குமார். இவர் சிறந்த கார் ரேஸரும் கூட, இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இவரின் நடிப்பில் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகைகள் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது,

AK64 Movie : அஜித் குமாரின் AK64..  இரண்டு நடிகைகளா? வைரலாகும் தகவல்!

அஜித் குமாரின் AK64

Published: 

07 Aug 2025 21:42 PM

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார்,  கேங்ஸ்டராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி ஒட்டுமொத்தமாக ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த வெற்றியை அடுத்து தனது அடுத்த திரைப்படத்திலும் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தகவல்கள் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகும் தகவலின்படி, அஜித் குமாரின்46வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடிக்கவுள்ளாராம். மேலும் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா (Swasika) முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், இந்த 2025, ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தமிழைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு!

அஜித் குமார் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு

அஜித் குமாரின் 64வது திரைப்படத்தின் எதிர்பார்ப்புகள்

அஜித் குமாரின் 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்தப் படம் குறித்து, சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த படமானது குட் பேட் அக்லி படத்தை ஒப்பிடும்போது, மிக பிரம்மாண்டமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார். அஜித் குமார் – அனிருத் கூட்டணியில் ஏற்கனவே விடாமுயற்சி, விவேகம் மற்றும் வேதாளம் எனப் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் ஆரம்பத்தில் வெளியான தகவலின்படி, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிவந்தது.

இதையும் படிங்க : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

அதைத் தொடர்ந்து தற்போது இளம் நடிகை ஸ்ரீலீலா, அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்றும், நடிகை சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்களானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. படக்குழு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் விரைவில் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. அது வெளியானால் எது உண்மை என தெரியும். மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.