அஜித் குமாரின் 64-வது படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையா? வைரலாகும் தகவல்

Ajith Kumar 64 movie there might be changed: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள 64-வது படத்தின் இயக்குநரை மாற்ற வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

அஜித் குமாரின் 64-வது படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையா? வைரலாகும் தகவல்

அஜித் குமார்

Published: 

19 Mar 2026 14:07 PM

 IST

தமிழ் சினிமாவில் தற்போது அதிக ரசிகர்களை கொண்டு உள்ளது நடிகர்கள் அஜித் குமார் மற்றும் தளபதி விஜய். இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் தளபதி விஜய் தமிழகத்தில் கட்சி ஒன்றை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கினார். இதன் காரணமாக அவர் இனி படங்களில் நடிக்கபோவது இல்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் ஜன நாயகன் படமே நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அரசியல் பக்கம் சென்றால் நடிகர் அஜித் குமார் அவரின் ரேஸிங் பக்கம் சென்றுவிட்டார். ஆனால் அவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதையும் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்ந்து நடிப்பு மற்றும் ரேஸிங் என இரண்டிலும் பிசியாக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஏகே 64-வது படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையா?

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி ‘AK-64’ படத்திற்கான இயக்குனர் தேர்வில் ஒரு மாற்றம் ஏற்படக்கூடும். இத்திட்டத்திற்காக இயக்குனர் ‘சிறுத்தை’ சிவாவை அஜித் குமார் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ‘கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு சிவா மனச்சோர்வுடன் இருப்பதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது; மேலும், தற்போது எந்தவொரு முன்னணி கதாநாயகனும் அவரது கதைக்குச் செவிசாய்க்கத் தயாராக இல்லை என்றும் தெரிகிறது. இந்தச் சூழலை சிவா, அஜித் குமாரிடம் பகிர்ந்துகொண்டதாகவும், அதன் விளைவாக தற்போது அஜித் அவரை ‘AK-64’ படக்குழுவில் இணைத்துக்கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read… மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவிற்கு எண்டே இல்லை… வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிதாமகன் படத்திற்காக சூர்யா செய்த செயல் – சிங்கம்புலி ஓபன் டாக்!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்