சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?
SivaKarthikeyan's film Seyon Shooting Update Viral On Social Media: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு சேயோன் என்று பெயர் வைத்துள்ளனர்.

சேயோன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரகாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேரைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் இறுதியாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்தப் படம் பராசக்தி. இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்தப் படத்தில் நடிக்காமல் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மேலும் சிவக்குமார் முருகேசன் முன்னதாக தாய் கிழவி என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இது அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகலில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேபைப் பெற்றதைப் போல ஓடிடியிலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபலங்கள் பலரும் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?
அதன்படி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கிய முதல் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல அவரது இயக்கத்தில் உருவாக உள்ள இரண்டாவது படமான சேயோன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் ஷூட்டிங் வருகின்ற 27-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு முதல் மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read… சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பூரி ஜெகன்நாத்… நெகிழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The shooting of #SivaKarthikeyan‘s film #Seyon is set to begin on April 27 in Madurai. pic.twitter.com/qPSC8yIrQu
— Movie Tamil (@_MovieTamil) April 20, 2026
Also Read… அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு இரண்டாது குழந்தை பிறந்தது – வைரலாகும் போஸ்ட்