விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் முக்கிய தகவல்
Suriya 46 Movie Update: தெலுங்கு இயக்குநருடன் நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக கூட்டணி அறிவித்தார். இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

சூர்யா 46
நடிகர் சூர்யா தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். சூர்யாவின் ரெட்ரோ படத்தை தொடர்ந்து தனது 45-வது படத்திற்காக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உடன் இணைந்து பணியாற்றி வரும் போதே 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி சூர்யாவின் 45-வது படமான கருப்பு படம் இறுதிக்கட்டப் பணிகளை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் அதே நேரத்தில் நடிகர் சூர்யாவின் 46-வது படம் தொடர்பான தகவல்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இயக்குநர் வெங்கி அட்லூரி தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்தாலும் தமிழ் சினிமாவிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அதன்படி தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படம் பான் இந்திய அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக மாறினார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
கோயம்புத்தூரில் நடைபெறும் சூர்யா 46 படத்தின் ஷூட்டிங்:
அதன்படி லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை இயக்க வெங்கி அட்லூரி ஒப்பந்தம் ஆனதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார்.
Also Read… யூடியூபில் பட்டையை கிளப்பும் சூர்யாவின் காட்மோட் பாடல்!
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.
Also Read… அனுபமா பரமேசுவரனின் லாக்டவுன் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ