அஜித் குமாரின் படத்தை தயாரிக்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்? இணையத்தில் கசிந்த தகவல்

AK 64 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் ஏகே 64. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித் குமாரின் படத்தை தயாரிக்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்? இணையத்தில் கசிந்த தகவல்

ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் குமார்

Published: 

02 Feb 2026 17:54 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாரின் நடிப்பில் திரையரங்குகளில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களிலுமே நடிகை த்ரிஷா க்ருஷ்ணன் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தாலும் அதிக அளவில் அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குட் பேட் அக்லிதான்.

அதன்படி இந்த குட் பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி இருந்தார். இவர் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்பதால் அவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படங்களில் இருந்து பல காட்சிகளை இந்த குட் பேட் அக்லி படத்தில் ரீ கிரியேட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடனே கூட்டணி வைப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அஜித் குமாருக்கு பிடித்திவிட்டது என்றால் ஒரு இயக்குநருடன் அடுத்தடுத்து பணிபுரிவார் என்று சினிமா வட்டாரங்களில் உள்ள தகவல் உண்மையானது போல இருந்தது அந்த அறிவிப்பு.

ஏகே 64 படத்தை தயாரிக்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்?

அதன்படி இந்த அஜித் குமாரின் 64-வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் தயாரிப்பாளர் யார் என்பது குறித்து இதுவரை இறுதி செய்யப்படாத நிலையில் தற்போது பிரபல தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் அனில் சுங்கரா தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… Legend Saravana: லெஜெண்ட் சரவணாவின் 2வது படம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள நிவின் பாலியின் சர்வம் மாயா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி