சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி? வைரலாகும் தகவல்

Actor Soori: நடிகர் சூரி தற்போது நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களை வெளியிட்டு வருகிறார். இறுதியாக மாமன் படத்தில் நடித்த சூரி படம் சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது மண்டாட்டி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி? வைரலாகும் தகவல்

நடிகர் சூரி

Published: 

01 Sep 2025 18:11 PM

நடிகர் சூரி (Actor Soori) நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவர் நடிக்கும் அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சூரி இறுதியாக நடித்தப் படம் மாமன். இந்தப் படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு நடிகர் சூரி திரைக்கதையை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகராக மட்டுமே சினிமாவில் வலம் வந்த சூரி தற்போது திரைக்கதை ஆசிரியராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மண்டாட்டி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சூரி.

தமிழில் நடிகர் சூரி நாயகனாகவும் தெலுங்கு மொழியில் அதேப் படத்தில் வில்லனாகவும் நடிஅக்ர் சூரி நடித்துள்ளார். ஸ்போர்ஸ் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் நட்டிகர் சூரி?

கோலிவுட் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஆர் ரவிக்குமார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் காமெடிப் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தை இயக்கி இருந்தார்.

ஏலியன் கான்செப்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக நடிகர் சூரி நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read… ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகர்கள் – ராஜிவ் மேனன் சொன்ன விசயம்!

நடிகர் சூரி இறுதியாக வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரித்விராஜ் நடிப்பில் கோல்ட் கேஸ் என்ற க்ரைம் த்ரில்லர் ஹாரர் படத்தை பார்த்து இருக்கீங்களா?