இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன்? இயக்கப்போகும் மாஸ் இயக்குநர்.. புது தகவலால் அதிரும் கோலிவுட்!
Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) சமீபத்தில் எழுதி இயக்கிய படம் கூலி. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர் உட்பட பலர் நடித்துள்ளனர். அனைவரின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகின்றது. கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்தப் படம் தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் வெளியாகி 4 நாட்களிலேயே உலக அளவில் ரூபாய் 404 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
மேலும் வரும் நாட்களில் படம் இன்னும் அதிக வசூலை ஈட்டும் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எந்தப் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து லோகேஷ் கனகராஜும் பல பேட்டிகளில் முன்னதாக பேசியிருந்தார். ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் படு வைரலாக பரவி வருகின்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முன்னதாக அளித்தப் பேட்டிகளில் கூலி படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாக உள்ள கைதி படத்தின் 2-ம் பாகத்தைதான் இயக்குவேன் என்று தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது சினிமா வட்டாரங்களில் புது தகவல் வைரலாகி வருகின்றது.
அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்திற்கு முன்பு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் படத்தை இயக்க உள்ளதாகவும் இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் சார்… ரஜினிகாந்தை புகழ்ந்த ஐபிஎஸ் ஆபிசர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Seems like #LokeshKanagaraj‘s Next immediate project will be Superstar #Rajinikanth & #KamalHaasan film, Produced by RKFI. Lokesh might do #Kaithi2 after this🤞
It is said that KamalHaasan has met Karthi on this & both mutually agreed for this Lineup🤝♥️ pic.twitter.com/OyxYfKZRqu
— AmuthaBharathi (@CinemaWithAB) August 19, 2025
Also Read… நடிகர் கார்த்தி மீது எனக்கு அப்போ மரியாதை வந்தது… தனுஷ் சொன்ன சம்பவம்!