நோ சூர்யா.. நோ அமீர்கான்.. டோலிவுட் நடிகரை நோக்கிச் செல்லும் லோகேஷ் கனகராஜ்
Director Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகின்றது.

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் படங்களை இயக்கி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டில் இருக்கும் சினிமாட்டிக் யுனிவர்ஸை தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதன்படி இவரது இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகியப் படங்கள் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்சில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் மூன்றும் ஏதோ ஒரு இடத்தில் இணைந்து இருக்கும் நிலையில் இதன் தொடர்ச்சிப் படங்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தொடர்ந்து இயக்குநராக பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார்.
அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள படம் டிசி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி வருகிறார். மேலும் இதில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக நடிகை வமிகா கபி நடித்து வருகிறார். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.
டோலிவுட் நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்தும் லோகேஷ் கனகராஜ்:
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு இரும்புக்கை மாயாவி என்ற ஒரு கனவு புராஜெக்ட் உள்ளது. இதனை முதலில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க நினைத்தார். தொடர்ந்து நடிகர் அமீர் கானிடம் இந்தக் கதை கூறியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜூனிடம் கதை கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது இரும்புக் கை மாயாவி படத்தின் கதை என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… இணையத்தில் கவனம் பெறும் நடிகர் சூர்யாவின் நியூ லுக்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#LokeshKanagaraj‘s Dream Project Irumbu Kai Mayavi is going to Happen 💥
🎬✨ A fruitful final meeting yesterday! Lokesh Kanagaraj, along with Aishwarya Suresh, met #AlluArjun and officially locked the project. 🤝🔥
💰🎥 Mythri Movie Makers will bankroll the film, which is… pic.twitter.com/WTCOxi6Gyu
— Movie Tamil (@_MovieTamil) December 24, 2025
Also Read… 2025-ம் ஆண்டில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படங்கள்… வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!