சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நடிகை?

Actress Bhagyashri Borse is being planned to play the Seyon movie: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் சேயோன். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக துல்கர் சல்மான் பட நடிகை நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நடிகை?

சேயோன்

Published: 

15 Mar 2026 15:32 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான பராசக்தி படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பராசக்தி படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக 60களில் நடைப்பெற்ற மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து இந்த பராசக்தி படம் எடுக்கப்பட்டு இருந்தது. அந்த மொழிப் போராட்ட காலத்தில் வாழ்ந்த பலர் இந்தப் படத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இரண்டாவது முறை கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் பட நடிகை?

மேலும் இந்த சேயோன் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்க உள்ளார். இவர் முன்னதாக சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் சார்பாக தயாராகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் தாய் கிழவி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தில் நாயகியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டீசர் ரிலீஸ் எப்போது? ஹேப்பி நியூஸ் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கர படத்திலிருந்து வெளியானது வாயா ஏ கரசாமி பாடலின் லிரிக்கள் வீடியோ

Follow Us
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக செல்லலாம் - அனுமதி வழங்கிய ஈரான்
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்காவில் 400 ஆண்டுகள் சிறை தண்டனை
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - இன்ஃபோசிஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு