எல்லாத்துக்கும் சாண்டி மாஸ்டர்தான் காரணம் – நடிகர் சௌபின் ஷாகிர்!

Actor Soubin Shahir: நடிகர் சௌபின் ஷாகிர் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் நடிகை பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடனம் ஆடியுள்ளது தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எல்லாத்துக்கும் சாண்டி மாஸ்டர்தான் காரணம் - நடிகர் சௌபின் ஷாகிர்!

சௌபின் ஷாகிர்

Published: 

17 Aug 2025 11:17 AM

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் அமீர் கான், நாகர்ஜுனா, உபேந்திரா ராவ் மற்றும் சௌபின் ஷாகிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ரெபா மோனிகா ஜான், காளி வெங்கட், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸி,  சார்லி, ரிஷிகாந்த், மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதில் பூஜா ஹெக்டே மோனிகா என்ற ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கேமியோ செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக மோனிகா பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மோனிகா பாடலுக்கு தமிழ் மக்களின் கரகோஷங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது:

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே கேமியோ செய்த மோனிகா பாடல் படம் வெளியாவதற்கு முன்பு லிரிக்கள் வீடியோ வெளியிட்ட போதே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது. காரணம் அந்தப் பாடலில் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடிகர் சௌபின் ஷாகிர் நடனம் ஆடி இருந்தார்.

இந்தப் பாடல் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் சௌபின் ஷாகிர் இந்த பாராட்டுகள் அனைத்திற்கும் மாஸ்டர் சாண்டி தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மோனிகா பாடலுக்கு தமிழ் மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் ரசிகர்களுடன் இணைந்து இந்தப் படத்தை மார்த்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சௌபின் ஷாகிரின் நடனம் மட்டும் இன்றி கூலி படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… சினிமாவில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதை விட அதுதான் ரொம்ப பிடிக்கும் – நடிகர் அர்ஜுன் ஓபன் டாக்

நடிகர் சௌபின் ஷாகிரின் இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… நாட்டாமை பட மிக்சர் கேரக்டர் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் கலகல பேச்சு!