சிம்புக்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு எஸ்.. SK-வுடன் புது படத்தில் இணையும் பார்க்கிங் பட இயக்குநர்?
SK24 Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி படமானது வெளியான நிலையில், இதையடுத்து புது படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் பார்க்கிங் பட இயக்குநருடன் இவர் புது படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன்
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த பராசக்தி படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா (Sreeleela), ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தி மொழி எதிர்ப்பு தொடர்பான கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Vankat Prabhu) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK26 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்புகள் இன்னும் வரவில்லை எனலும், படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாகவே நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு முன் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின்(Cibi Chakravarthi) இயக்கத்தில் SK24 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தை பார்க்கிங் பட பிரபல இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கையில் தான் கோட் படம் உருவானது – வெங்கட் பிரபு
ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் சிவகார்த்திகேயன் இணையும் பட கதை இதுவா :
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பார்க்கிங் என்ற படத்தை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமானார். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அடுத்ததாக நடிகர் சிலம்பரசனின் கூட்டணியில் STR49 என்ற படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின் தயாரிப்புக்கு நிறுவனத்தின் மீது எழுந்த ஈ.டி புகார் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தை அடுத்தாக அரசன் படத்தில் சிலம்பரசன் இணைந்துவிட்டார்.
இதையும் படிங்க: பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க… நண்பர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்
இதன் காரணமாக ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைகிறாராம். இந்த புது படத்தின் கதை வேறுஎதுவும் இல்லை, சிலம்பரசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட STR49 பட கதைதான் என கூறப்படுகிறது. இப்படமானது கல்லூரியை மையமாக கொண்டு நடக்கும் ஒரு அதிரடி கதைக்களத்தில் தயாராகுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதை தற்போது சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருந்த நிலையில், அவர் இப்படத்தை SK24 படமாக நடிப்பதாக வட்டாரங்கள் கூறுகிறது. இது குறித்து இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
தீ பரவட்டும் 🔥#ParasakthiTrailer – https://t.co/I5dCAoGQdG #Parasakthi #ParasakthiFromJan10 pic.twitter.com/ttBz7wzw5s
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 4, 2026