தாய் கிழவி படத்தின் வெற்றியால் தள்ளிப்போன சேயோன் பட ஷூட்டிங் – சிவகார்த்தியேன் ஓபன் டாக்

Sivakarthikeyan talks about Seyon movie shooting postponed: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சேயோன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து அவர் பேசியது வைரலாகி வருகின்றது.

தாய் கிழவி படத்தின் வெற்றியால் தள்ளிப்போன சேயோன் பட ஷூட்டிங் - சிவகார்த்தியேன் ஓபன் டாக்

சேயோன்

Published: 

12 Mar 2026 12:13 PM

 IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக எண்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொடந்து படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக அவரது 25-வது படமான பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் ரூபாய் 100 கோடியைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து பிசியாக இருப்பது போல படங்களை தயாரிப்பதில் பிசியாக இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மட்டும் இன்றி தயாரிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தாய் கிழவி படத்தின் வெற்றியால் தள்ளிப்போன சேயோன் பட ஷூட்டிங்:

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த தாய் கிழவி படத்தை இயக்கிய இயக்குநர் சிவக்குமார் முருகேசன் தான் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள சேயோன் படத்தை இயக்க உள்ளார். மேலும் கமல் ஹாசன் அந்தப் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் தாய் கிழவி படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, இயக்குனர் சிவகுமார் முருகேசனின் அடுத்த படமான சேயோனின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் காரணமாக, படத்தின் வெற்றியை முறையாகக் கொண்டாட படக்குழு அடுத்த மாதத்திற்கு படப்பிடிப்பை ஒத்திவைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சேயோனின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே… போஸ்டர் வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டிய Hi படக்குழு

இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சு:

Also Read… ரவி மோகன் நடிக்கும் படத்திற்கு இனி ‘ப்ரோ கோட்’ என்று பெயரிடப்படாது!

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..