Coolie : கூலி படத்தில் ரஜினியின் இளமை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்? கேமியோ ரோலில் இவரா?

Coolie Movie Cameo Role Update : தமிழ் சினிமாவில் 2025ம் ஆண்டு, அனைவரின் எதிர்பார்ப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம் கூலி. ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் இளமை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இணையத்தில் வைரலாகும் தகவல் குறித்துப் பார்க்கலாம்.

Coolie : கூலி படத்தில் ரஜினியின் இளமை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்? கேமியோ ரோலில் இவரா?

ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம்

Published: 

10 Aug 2025 13:18 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth)  நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தைத் தமிழ் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது, பான் இந்திய மொழிகளில் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து சுமார் 8 பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இதில் நாகார்ஜுனா, ஆமிர் கான் (Aamir Khan), உபேந்திர ராவ், சவுபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் (Shuruti Haasan) என பல்வேறு பிரபலங்கள் நினைந்து நடித்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் இந்தி ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ட்ரெய்லரில், ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் பழைய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினியின் இளமை கதாபாத்திரம் காட்டப்பட்டிருக்கிறது. அதில் தமிழ் பிரபல நடிகர் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது.அந்த நடிகர் வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயன்தான் (Sivakarthikeyan). ரஜினிகாந்த்தின் இளமை கதாபாத்திரத்தில், சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த படம் வெளியானால்தான் அது உண்மையா என்பது தெரியும்.

இதையும் படிங்க : மீண்டும் சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் சமந்தா.. எந்த படத்தில் தெரியுமா?

கூலி திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் பதிவு :

ரஜினிகாந்தின் இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் இந்த படத்தில் டிக்கெட் ப்ரீ புக்கிங் 2025, ஆகஸ்ட் 8ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த படமானது ப்ரீ புக்கிங்கில் மட்டும் இதுவரை சுமார் ரூ 2.67 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிலம்பரசன் பட ஷூட்டிங் எப்போது? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

வெளியீட்டிற்கும் முன்னே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவரும் நிலையில், முதல் நாளில் சுமார் ரூ.70 முதல் 80 ரூபாய் கோடிகளுக்கு மேல் வசூல் செய்யலாம் எனக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர். கூலி படமானது முதல் நாளிலே தமிழகத்தில் மட்டும் சுமார் 789 காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் உலகமெங்கும் சுமார் 10,000 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவும் என கூறப்படுகிறது.