நீ சிங்கம் தான்… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது பத்து தல படம்

3 Years of Pathu Thala Movie: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பத்து தல. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

நீ சிங்கம் தான்... 3 ஆண்டுகளை நிறைவு செய்தது பத்து தல படம்

பத்து தல

Published: 

30 Mar 2026 16:26 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கடந்த 30-ம் தேதி மார்ச் மாதம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பத்து தல. இந்தப் படத்தை இயக்குநர் ஒப்பிலி என் கிருஷ்ணன் எழுதி இயக்கி இருந்தார். இது இவரது இயக்கத்தில் கன்னட சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற முஃப்டி என்ற படத்தினை ரீமேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதன்படி நடிகர்கள் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, கலையரசன், தீஜய் அருணாசலம், மது குருசுவாமி, ஜோ மல்லூரி, ஒபேலி என். கிருஷ்ணா, ரெடின் கிங்ஸ்லி, கஜராஜ், மனுஷ்யபுத்திரன், கண்ணன் பொன்னையா, வேட்டை முத்துக்குமார், நமோ நாராயணா, சென்ட்ராயன், அஷ்வின் ராஜா, சௌந்தரராஜா, அபிஷேக் வினோத், லட்சுமி பிரியா, தீரஜ், மோனா ககடே, ஹர்ஷிதா, உமேஷ் கௌசிக், திண்டுக்கல் தனம், எம்.எஸ்.ராஜா ராஜேஸ்வரன், ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன், சாயிஷா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

3 ஆண்டுகளை நிறைவு செய்தது பத்து தல படம்:

இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் ஒரு தாதாவாக நடித்து இருப்பார். அவர் பெரிய படைபலத்துடன் இருந்தாலும் மக்கள் அனைவரும் அவரை கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் அவர் செய்யும் வேலைகள் அனைத்தும் பொதுவான பார்வையில் தவறாக இருந்தாலும் அது அந்த மக்களின் நலனுக்காகவே இருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Mari Selvaraj: தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி பட நிலை என்ன? தள்ளிப்போக இதுதான் காரணமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… எனது ஆதரவு விஜய்க்குதான்.. த.வெ.க.வில் இணைகிறேனா? – பிரபல நடிகை பேச்சு!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..