அரசன் படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபல நடிகர்கள்… அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள்
Arasan Movie Shooting and cast update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் இந்த அரசன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த அரசன் படம் தனுஷின் வட சென்னை படத்தின் பேர்லலாக உருவாகி வருவதாக இயக்குநர் முன்பே தெரிவித்து இருந்தார்.
இது வட சென்னை 2 இல்லை என்றும் பேர்லல் கதை என்பதால் வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் இந்த அரசன் படத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருந்து வருகின்றது. இந்த நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அரசன் படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபல நடிகர்கள்:
அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதியின் போர்ஷன் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அரசன் படத்தில் நடிகர் விக்ராந்த் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் புகழ் கமலேஷ் உட்பட பலர் இணைந்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
Also Read… KH x RK படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Arasan – Vikranth & TouristFamily Kamalesh onboard for the film🌟🔥
The second schedule is expected to begin on Mar 16th at Chennai. A long schedule has been planned🤝
Portions involving #SilambarasanTR, #VijaySethupathi, #Nelson, #Vikranth, #Kamalesh & others will be part of… pic.twitter.com/GGY03KBfN8
— AmuthaBharathi (@CinemaWithAB) March 11, 2026
Also Read… ஹேப்பி ராஜ் படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது இரண்டாவது சிங்கிள்