விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் பட ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

Arasan Movie Release Update: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருக் நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் பட ஷூட்டிங்... ரிலீஸ் எப்போது தெரியுமா?

அரசன்

Published: 

31 Mar 2026 12:42 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிறன் எழுதி இயக்கி வருகிறார். படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ஷூட்டிங் எப்போது முடிவடையும் என்றும் அதனைத் தொடர்ந்து படத்தை படக்குழு எப்போது வெளியிட திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முன்னதாக பேட்டியில் இயக்குநர் வெற்றிமாறன் அரசன் படம் வட சென்னை படம் நடைப்பெற்ற கலத்திலேயே பேர்லலாக நடைபெறுவது போல படமாக்கப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். மேலும் இந்த அரசன் படத்தில் வட சென்னை படத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தனுஷ் இருக்கிறாரா? இல்லையா என்பது படம் வெளியாகும் போதே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியை குறிவைக்கும் அரசன் படக்குழு? வைரலாகும் தகவல்!

சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, படக்குழுவினர் பின்னணிப் பணிகளைத் (Post-production) தொடங்கவுள்ளனர். 2026 தீபாவளிக்கு இப்படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… இது இளைஞர்களின் வெற்றி… வசூலில் கெத்து காட்டும் கென் கருணாஸின் யூத் படம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று மாலை வெளியாகிறது LIK படத்திலிருந்து அடாவடி பாடல்

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..