Silambarasan: ‘உண்மையான திருவிழா ஜன நாயகன் ரிலீஸ் அப்போதான்’- தளபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிலம்பரசன்!

Silambarasan Support To Thalapathy Vijay: கோலிவுட் சினிமாவில் சிறப்பான நாயகனாக வலம்வருபவர் சிலம்பரசன். இவர் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைத்த நிலையில், அதற்க்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளார். விஜய் அண்ணனின் ஜன நாயகன் படம் எப்போது ரிலீசாகிறதோ அப்போதுதான் திருவிழா என எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Silambarasan: உண்மையான திருவிழா ஜன நாயகன் ரிலீஸ் அப்போதான்-  தளபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிலம்பரசன்!

விஜய் மற்றும் சிலம்பரசன்

Published: 

08 Jan 2026 16:56 PM

 IST

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம்தான் அரசன் (Arasan). இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில், தனுஷின் வட சென்னை பட உலகத்திலிருந்து வித்தியாசமான கதையில் இந்த அரசன் திரைப்படம் தயாராகிவருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தற்போது நடிகர் சிலம்பரசன் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் 2026 ஜனவரி 9ம் தேதியில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமான ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படம் வெளியாகவிருந்தது. இந்த படத்தின் சென்சார் பிரச்சனையின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை 2026 ஜனவரி 9ம் தேதியில் ஜன நாயகன் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் வழங்கப்பட உள்ளது.

இதன் காரணமாக ஜன நாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பின் அரசியல் காரணங்கள் பல இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக கோலிவுட் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிலம்பரசனும் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘ரயாவாக யாஷ்’… அதிரடி காட்சிகளுடன் வெளியானது ‘டாக்சிக்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ! 

ஜன நாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் நடிகர் சிலம்பரசன் ,” அன்புள்ள விஜய் அண்ணா, இதுபோன்ற பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடவும் பெரிய புயலையே நீங்கள் கடந்துவிட்டிர்கள். இதுவும் கடந்துபோகும். உண்மையான திருவிழா ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸாகும் நாளிலே தொடங்கும்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்களிடையே தீயாக பரவிவருகிறது. மேலும் சிலம்பரசனின் ரசிகர்களும் தளபதி விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை :

தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் என படக்குழு கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் முன்னே அறிவித்துவிட்டது. அதன்படி இப்படத்தின் பின்னணி வேலைப்பாடுகளும் சிறப்பாகவே நடைபெற்றுவந்தது இந்நிலையில் கடந்த 2025 டிசம்பர் 19ம் தேதியில் இந்த படமானது சென்சார் சான்றிதலுக்காக, சென்சார் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அன்றிலிருந்து இதற்கான காரணங்கள் இழுத்தடிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 20256ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியில் இந்த படத்திற்கான சென்சார் சான்றிதழுக்கு இன்னும் மறுசோதனை சென்னியவேண்டும் என கூறப்பட்டிருந்ததாகவும்.

இதையும் படிங்க: பொங்கலா? குடியரசு தினமா? தளபதியின் ஜன நாயகன் பட ரிலீஸ் எப்போது இருக்கும்? விவரங்கள் இதோ!

இதனால் சென்சாருக்கு தாமதமாகும் என தகவல்கள் வெளியாகிவந்தது. இதனை அடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் 2 விசாரணை முடிந்தது. மேலும் இப்படத்தின் சென்சாருக்கான இறுதி விசாரணை நாளை 2026 ஜனவரி 9ம் தேதியில் நடைபெறுகிறது. இந்த முடிவில்தான் ஜன நாயகன் படம் எப்போது வெளியாகும் என உறுதியாக தெரியும்.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..