Silambarasan: தெலுங்கில் முன்னணி நடிகரின் படத்தில் சிலம்பரசன்?

Silambarasan Telugu Movie Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், தெலுங்கில் பிரம்மாண்ட படத்தின் பார்ட் 2ல் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்த படம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Silambarasan: தெலுங்கில் முன்னணி நடிகரின் படத்தில் சிலம்பரசன்?

சிலம்பரசனின் தெலுங்கு படம்

Published: 

30 Sep 2025 14:48 PM

 IST

நடிகர்  சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தொடர்ந்து தமிழில் பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக பான் இந்திய மொழிகளில் வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல்ஹாசன் (Kamal Hasaan)மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025 ஜூன் 5ம் தேதியில் வெளியான இப்படமானது கடும் தோல்வியில் முடிந்தது. இந்த படத்தை தொடந்து, சிலம்பரசன் புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது இவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் STR49 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் வரும் 2025 அக்டோபர் மாதத்தின் இடைப்பட்ட நாளில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து, சிலம்பரசன் தெலுங்கில் முன்னணி நடிகரின் பார்ட் 2 படத்தில் முக்கிய எவடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த பிரபல நடிகர் வேறு யாருமல்ல,  நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்தான் (Jr. NTR). இவரின் தேவரா பார்ட் 2 (Devara Part 2) படத்தில் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : தனுஷின் இட்லி கடை ரிலீஸ்.. வைரலாகும் மேக்கிங் வீடியோ!

ஜீனியர் என்.டி. ஆரின் தேவாரா பார்ட் 2 படத்தில் சிலம்பரசன் :

நடிகர் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான படம் தான் தேவரா. அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் கடல்சார்ந்த கதைக்களத்துடன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருந்த இலையில், இப்படத்தின் பார்ட் 2 படம் உருவாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இதையும் படிங்க : ஒரு நாள் முன்னே தமிழகத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1.. வைரலாகும் தகவல்!

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வீ கபூர் முன்னணி வேடத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் கதாபாத்திரத்தை தேடிவரும் நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிலம்பரசனை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சக்திவாய்ந்த வேடத்தில் நடிப்பதற்கு சிலம்பரசனிடம் பேச்சுவார்த்தைகளை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சிலம்பரசனின் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :

நடிகர் சிலம்பரசன் தற்போது வென்றிமாரனின் இயக்கத்தில் STR49 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு த்யாரித்துவருகிறார். இந்த STR49 படமானது வட சென்னை படத்தின் பின்னணி கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாம்.

மேலும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வரும் 2025 அக்டோபர் 4ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், அதில் இப்படத்தின் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.