Silambarasan: அஜித் குமாரை நேரில் சந்தித்த தருணம் – நெகிழ்ச்சியாக பேசிய சிலம்பரசன்!

Silambarasan About Ajith Kumar: கோலிவுட் சினிமாவில் சிறந்த நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் அரசன் திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், துபாய் கார் ரேஸின்போது அஜித் குமாரை நேரில் சந்தித்த தருணம் பற்றி பகிர்ந்துள்ளார்.

Silambarasan: அஜித் குமாரை நேரில் சந்தித்த தருணம் - நெகிழ்ச்சியாக பேசிய சிலம்பரசன்!

அஜித் மற்றும் சிம்பு

Updated On: 

05 Feb 2026 15:55 PM

 IST

தமிழில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவர் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக தக் லைப் (Thug Life) என்ற படமானது வெளியாகியிருந்தது. கமல்ஹாசனுடன் (Kamal Haasan)இதில் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்த நிலையில், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தை அடுத்தாக இவர் வெற்றிமாறனுடன் (Vetrimaaran) அரசன் (Arasan) திரைப்படத்தில் இணைந்துவிட்டார். தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் முழுமையாக படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிடுமாம்.

இந்த படத்தில் சிலம்பரசன் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன், துபாயில் (Dubai) தல அஜித் குமாரை (Ajith Kumar) கார் ரேஸின்போது சிலம்பரசன் நேரில் சந்தித்திருந்தார். அவரை நேரில் சந்தித்த தருணம் குறித்து நேர்காணல் ஒன்றில் சிலம்பரசன் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

அஜித் குமாரை நேரில் சந்தித்தது குறித்து நடிகர் சிலம்பரசன் பேச்சு:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சிலம்பரசன் அதில், “நான் துபாய்க்கு ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்காக சென்றிருந்தேன். அப்போது செல்லும் வழியில் அஜித் குமாரின் ரேஸ் நடக்கும் இடம்வந்தது. நானும் அவரை நீண்ட நாட்களாக சந்திக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் சரியான வாய்ப்பு கிடைத்தது என நான் நினைத்தேன். மறுபுறம் அவரின் ரேஸை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் இருந்தேன்.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்

அதனால், அவரிடமே நான் அங்கு வரலாமா? என அனுமதி கேட்டேன். மேலும் AK-வும் என்னை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டார். என்னை சந்தித்தபிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மேலும் அவர் என்னிடம் கார் ரேஸ் பந்தயம் குறித்தும் மிக விரிவாக பகிர்ந்துகொண்டார். நானும் அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

அஜித் குமார் குறித்து சிலம்பரசன் பேசியது குறித்த எக்ஸ் பதிவு:

நடிகர் சிலம்பரசன் தற்போது அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். இப்படம் தனுஷின் வடசென்னை படத்தின் பின்னணி கதையில் உருவாகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்