என் குழந்தைகள் என்னுடைய எந்தப் படத்தையும் பார்த்ததில்லை – ஷாலினி அஜித்குமார்
Actress Shalini Ajith Kumar about Children : தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி நாயகியாக கலக்கி வந்தவர் நடிகை ஷாலினி அஜித்குமார். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குடும்பத்தினருடன் ஷாலினி அஜித்குமார்
தெலுங்கு சினிமாவில் கடந்த 1983-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் நடிகை ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தப் படங்களில் பேபி ஷாலினி என்று திரையுலகினரும் மக்களும் அன்புடன் அழைத்து வந்தனர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த இவர் தொடர்ந்து 1997-ம் ஆண்டு முதல் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 12 படங்களில் மட்டுமே நாயகியாக நடித்தார். அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த நடிகர்கள் அஜித் குமார், விஜய், மாதவன், பிரசாந்த் ஆகியோர் உடன் இணைந்து நடித்து இருந்தார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
நாயகியாக நடிகை ஷாலினியின் நடிப்பில் வெளியான படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும் தற்போது வரை இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் உடன் அமர்களம் படத்தில் நடித்த போது அவர் மீது காதல் கொண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிகை ஷாலினி அஜித் குமார் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் எந்த கனெக்ஷனிலும் இல்லாம இருந்த ஷாலினி அஜித்குமார் கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் அஜித் குமார் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
என் குழந்தைகள் என்னுடைய எந்தப் படத்தையும் பார்த்ததில்லை:
இந்த நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் நடிகை ஷாலினி அஜித்குமார் கலந்துகொண்டு பேசிய போது அவரது குழந்தைகள் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என் குழந்தைகளுக்குச் சொல்லப் போகிறேன், தயவுசெய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்கள். நீங்கள் இதுவரை என்னுடைய எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. என் மகள் சமீபத்தில் அலைபாயுதே பற்றி என்னிடம் கேட்டாள், அவள் என்னுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறாள். ஆனால் அது நடக்கவில்லை என்று ஷாலினி அஜித் குமார் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ஷாலினி அஜித் குமார் பேச்சு:
“I’m going to use this opportunity to tell my children, please can you just watch 1 film of mine😂. Thee’ve never seen any of my films. My Daughter recently asked me about Alaipayuthey, she wanna watch with me. But it didn’t happen🤞”
– #ShaliniAjithkumar pic.twitter.com/zDBrYnVWEc— AmuthaBharathi (@CinemaWithAB) February 21, 2026
Also Read… வாடிவாசல் படம் 100% நடக்கும் – மௌனம் பேசியதே தயாரிப்பாளர்