Selvaraghavan: மலையாள சினிமாவில் செல்வராகவன்.. என்ன படம் தெரியுமா?

Selvaraghavan Malayalam Debut : தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், சிறப்பான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் செல்வராகவன். இவர் மலையாள படமான பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Selvaraghavan: மலையாள சினிமாவில் செல்வராகவன்.. என்ன படம் தெரியுமா?

செல்வராகவனின் பல்டி திரைப்படம்

Published: 

22 Aug 2025 10:35 AM

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் (Selvaraghavan). இவரின் இயக்கத்தில், அவரின் சகோதரர் தனுஷ் (Dhanush) முதல் நடிகர் சூர்யா (Suriya) வரை பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இவரின் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படமானது உருவாகி வருகிறது. படத்தை இயக்குவதைத் தொடர்ந்து இவர், படங்களில் சிறப்பு வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் பல்வேறு நடிகர்களின் படங்களிலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இவர் குறிப்பாக தளபதி விஜய்யுடன், பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் செல்வராகவன் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் மலையாள சினிமாவிலும் நடிகராக நுழைந்துள்ளார்.

நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் (Shanthanu Bhagyaraj) மற்றும் ஷேன் நிகம் (Shane Nigam) முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் பல்டி. இந்த திரைப்படத்தில்தான்  செல்வராகவனும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது படக்குழு இவரின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன், “பொற்தாமரைப் பைரவன்” (Porthamarai Bhairavan) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இது குறித்த போஸ்டரை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

இதையும் படங்க : தளபதி விஜய்யின் மதுரை மாநாட்டின் டிவி நேரலையில் ‘மதராஸி’ பட விளம்பரம்.. என்ன காரணம்?

செல்வராகவன் பல்டி படக் கதாபாத்திரம் அறிமுக குறித்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சாந்தனு பாக்யராஜ் :

பல்டி திரைப்படம் :

பிரபல மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பல்டி. இந்த படத்தில் நடிகர் ஷேன் நிகம் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர் சாந்தனு பாக்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது முழுக்க கபடி கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படத்தில் மேலும் ப்ரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க :யோகி பாபு நடிப்பில் படம் இயக்கும் ரவி மோகன்.. ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

இவரின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் நடிகர் சாந்தனுவின் கதாபாத்திரம் அறிமுக வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது நடிகரும், இயக்குநருமான செல்வராகவனின் கதாபாத்திர அறிமுக போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் செல்வராகவன் பொற்தாமரைப் பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

பல்டி படத்தின் ரிலீஸ் எப்போது :

நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஷேன் நிகம் நடித்துள்ள இப்படத்தில், கதாநாயகியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இவர் தமிழில் அயோத்தி, கிஸ் மற்றும் கில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த பல்டி படத்திற்குத் தமிழ் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவர் இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இசையமைப்பாளாராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் செப்டம்பர் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.