Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tourist Family: நல்ல வரவேற்பு.. 50வது நாளை கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’!

Tourist Family 50-Day Celebration : நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி அசத்தியிருந்தார். கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான இப்படம் 50 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இது குறித்துப் படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.

Tourist Family: நல்ல வரவேற்பு.. 50வது நாளை கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’!
டூரிஸ்ட் பேமிலி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jun 2025 15:14 PM IST

கோலிவுட் சினிமாவில் தனது இயக்கத்தில் வெளியான முதல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). அவரின் இயக்கத்தில் கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைகளுடன் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் முன்னணி நடிகர்களாக சசிகுமார் (Sasikumar)  மற்றும் சிம்ரன் (Simran) இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் நடிகை சிம்ரன் முன்னணி கதாநாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் சூர்யாவின் ரெட்ரோ (Retro)  மற்றும் நானியின் ஹிட் 3 (HIT 3) போன்ற படங்களுடன் சினிமாவில் வெளியானது.

இந்த படத்துடன் இரு பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகியிருந்தாலும், மக்களிடையே இப்படத்திற்கு வரவேற்புகள் இருந்தது. இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். இந்நிலையில் இந்த படமானது வெளியாகி சுமார் 50 நாட்களைக் கடந்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

டூரிஸ்ட் பேமிலி படக்குழு வெளியிட்ட 50 நாள் கொண்டாட்ட பதிவு :

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் :

நடிகர் சசிகுமாரின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது இலங்கை அகதிகள் குடும்பத்தின் கதைக்களம் கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் ஷங்கர், கமலேஷ் ஜெகன் என இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர் குடும்பமாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபுவும் நடித்திருந்தார்.

மொத்தமாக இப்படமானது ஒரு பேமிலி என்டேர்டைனர் படமாக அமைந்திருந்தது என்றே கூறலாம். சுமார் ரூ 8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படமானது மொத்தமாக சுமார் ரூ 75 கோடிகளை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.

ஓடிடியில் ரசிகர்கள் வரவேற்பு :

இந்த திரைப்படமானது திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த 2025, ஜூன் 2ம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இப்படமானது ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி வருகிறது. இப்படமானது திரையரங்குகளின் வெற்றியை தொடர்ந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகிறது. இப்படமானது ஓடிடியில் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.