சரத்குமாரின் ஆழி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அப்டேட்!
Aazhi Movie Release Update: தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களிடையே நாட்டாமையாக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ஆழி. இந்தப் படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்பது குறித்து அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

ஆழி
தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது நடிப்பில் 90களில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் சரத் குமார் நடிப்பில் வெளியான பலப் படங்கள் 90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜியாக உள்ளது. அதிலும் குறிப்பாக சூர்ய வம்சம் படம் தற்போதுவரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து நாயகனாக நடித்து வந்த நடிகர் சரத்குமார் தற்போது அதிக அளவில் முன்னணி வேடங்களிலும் சிறப்பு கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார். அதன்படி நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 5 படங்கள் திரையரங்குகளில் வெளியானது.
அந்த 5 படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 5 படங்களிலும் அவர் நாயகனாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மாறாக அப்பா வேடத்திலும் சிறப்பு கதாப்பாத்திரத்திலும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் அனைத்திலும் நடிகர் சரத்குமாரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சரத்குமாரின் ஆழி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் ஆழி. இந்தப் படத்தை இயக்குநர் மாதவ் ராமதாசன் எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஸ், வையாபுரி, தாமரை செல்வி மற்றும் ஸ்ரீஜித் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகர் சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We are thrilled to announce that #Aazhi releases worldwide on February 27th 🌊
A gripping oceanic story shaped by power, survival and consequence.#Aazhi #AazhiFromFeb27 @Aazhimovie @888production_ @realsarathkumar
@Madhavramadasan @udhayramakrish2 #SajitKrishnan… pic.twitter.com/L4Y6l3WGa6— R Sarath Kumar (@realsarathkumar) February 1, 2026
Also Read… Karuppu: ‘காத்திருப்பிற்கு ஒர்த்தான படம் கருப்பு’ – அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!