வாத்தி பட ஷூட்டிங்கில் அகாண்டா படத்தை புகழ்ந்து பேசிய தனுஷ் – நடிகை சம்யுக்தா மேனன் ஓபன் டாக்

Actress Samyuktha Menon: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா மேனன். இந்த நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய போது நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாத்தி பட ஷூட்டிங்கில் அகாண்டா படத்தை புகழ்ந்து பேசிய தனுஷ் - நடிகை சம்யுக்தா மேனன் ஓபன் டாக்

தனுஷ், சம்யுக்தா மேனன்

Published: 

29 Nov 2025 16:07 PM

 IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள சினிமாவில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து இரண்டாவதாக வெளியான தீவண்டி என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை சம்யுக்தா மேனன். இந்தப் படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் நடிகர் டொவினோ தாமஸிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சம்யுக்தா மேனன் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகை சம்யுக்தா மேனன்.

தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த வாத்தி படம் தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்தப் படத்திற்காக ஜீவி பிரகாஷ் குமார் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாத்தி பட ஷூட்டிங்கில் அகாண்டா படத்தை புகழ்ந்து பேசிய தனுஷ்:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சம்யுக்தா மேனன் விழா ஒன்றில் பேசிய போது நான் வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, ​​அகண்டா வெளியான நாளில், தனுஷ் சார் படத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை.. அவர் சொன்னார், ‘அசாதாரணமானது.. எனர்ஜி.. அஹோரா பகுதிகள் அபாரமாக இருந்தன.. தமனின் உழைப்பு அருமை..’ என்று பாராட்டி பேசினார் என்று நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்து இருந்தார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்… இணையத்தில் வைரலாகும் போட்டோ

இணையத்தில் வைரலாகும் சம்யுக்தாவின் பேச்சு:

Also Read… பிசாசு 2 படத்தின் நிர்வாண காட்சி குறித்து ஓபனாக பேசிய ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..