சமுத்திரக்கனியின் முதல் வெப் சீரிஸ் தடயம்… ரிலீஸ் எப்போது தெரியுமா
Samuthirakanis Thadayam Web Series Update: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சமுத்திரகனி. இவர் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது இணையதள தொடரில் முதன் முறையாக நடித்து உள்ளார்.

தடயம்
இயக்குநர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சமுத்திக்ரகனி ஆரம்ப காலக்கட்டத்தில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து சின்னத்திரையில் சீரியல்களை இயக்குவது மற்றும் நிகழ்ச்சிகளை இயக்குவது என தொடர்ந்து பணியாற்றி வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வெளியான உன்னைச் சரணடைந்தேன் படத்தினை இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக சமுத்திரகனி அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநராகப் பலப் படங்களை இயக்கிய சமுத்திரகனி படங்களில் நடிகராகவும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி இயக்குநர் சமுத்திரகனி தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து வில்லன், கதையின் நாயகன் மற்றும் சிறப்பு கதாப்பாத்திரம் என நடித்து வரும் சமுத்திரகனி தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுகு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் அதிக அளவில் தெலுங்கு மொழியிலும் குறிப்பாக வில்லன் கதாப்பாத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியாகும் முதல் வெப் சீரிஸ் தடயம்:
அதன்படி தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகர் சமுத்திரகனி தற்போது முதன் முறையாக வெப் சீரிஸில் நடித்துள்ளார். அதன்படி சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள இணையதள தொடர் தடயம். இந்த தொடரை இயக்குநர் நவின்குமார் பழனி குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடிகர்கள் ஷிவதா, ராஜ் திரன்தாஸ், மூணார் ரமேஷ், சுந்தரபாண்டியன், பிரேம், கொற்றவை, விசாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்ணா, மற்றும் தயாளன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த தொடர் வருகின்ற 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விக்ராந்த் – ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் டைட்டிலை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்
ஜீ 5 ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
விசாரணை ஆரம்பம்🔍
Samuthirakani’s 1st ever web-series #Thadayam Premieres on 27th Feb On ZEE5!#Thadayam #ThadayamOnZEE5 #TamilZEE5Original #ZEE5Tamil #TamilZEE5 pic.twitter.com/ctaQm3cwIO
— ZEE5 Tamil (@ZEE5Tamil) February 18, 2026
Also Read… Toxic Movie: யாஷின் டாக்சிக் பட டீசர் ரிலீஸ் எப்போது?- படக்குழு வெளியிட்ட அப்டேட் இதோ!