லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் – நடிகை சமந்தா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Samantha talks about school days memories: பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னதாக இவர் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் - நடிகை சமந்தா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

சமந்தா ரூத் பிரபு

Published: 

28 Apr 2026 17:35 PM

 IST

தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. தமிழ் சினிமாவில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாய படத்தில் சிறிய காட்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு (Actress Samantha Ruth Prabhu) நடித்து இருந்தாலும் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சம்ந்தா ரூத் பிரபு இரண்டு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அதில் பெரும்பாலானா படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்தும் வருகின்றார். இந்த நிலையில் தற்போது சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடிக்கும் மா இண்டி பங்காரம் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா ருத் பிரபு இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அகண்டா பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி? வைரலாகும் தகவல்

லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன்:

சமந்தா தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தினாலும் அவர் சென்னை பொண்ணு தான். தனது குடும்பத்தினர் உடன் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தான் வசித்து வந்தார். அவர் அளித்தப் பேட்டியில் 11-ம் வகுப்பு படித்த போது ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுத்த சமந்தாவின் தந்தை பல்லாவரத்திற்கு உள்ளேயே ஓட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் சமந்தாவோ ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு மீனம்பாக்கம் வரை சென்று போலீஸிடம் மாட்டிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து போலிஸிடம் அழுத்துக்கொண்டே கெஞ்சி அங்கு இருந்து வீட்டிற்கு திரும்பியதாக மிகவும் நகைச்சுவையாக அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… உங்கள் திறமையில் 10 சதவீதம் எனக்கு வேண்டும் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Follow Us
Related Stories
Karuppa: அய்யா கருப்பனே வாருமையா…. அதிரடி இசையில் வெளியானது கருப்பு படத்தின் கருப்பா கூட வா பாடல்!
4 ஆண்டுகளைக் கடந்தது பிரித்விராஜ் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜன கண மன படம்!
தேர்வு உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்போது, ​​தேர்வை யார் தீர்மானிக்கிறார்கள்? அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது எக்ஸாம் இணையதள தொடர்!
Samantha: அவள் உலக அழகியே.. ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சமந்தா – வைரலாகும் போட்டோஸ்!
பர்த்டே ஸ்பெஷல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!
பேசில் ஜோசஃப் – அல்லு அர்ஜுனின் படம் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..