Samantha : பிளாக் அண்ட் ஒயிட் குயின்.. ரசிகர்களைக் கவர்ந்த சமந்தாவின் போட்டோ!
Samanthas Instagram Post Viral : நடிகை சமந்தா ரூத் பிரபு, பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளாராகவும் படங்களை தயாரித்து வருகிறார் . இந்நிலையில், இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

சமந்தா ரூத் பிரபு
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2 ஆண்டுகாலமாக எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், அதை தொடர்ந்து பாலிவுட்டில் சிட்டாடல் : ஹனி பன்னி (Citadel: Honey Bunny) என்ற வெப் தொடரில், நடிகர் வருண் தவானுடன் (Varun Dhawan) இணைந்து நடித்திருந்தார்.
இதில் அவர் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது தயாரிப்பாளாராகவும் படங்களை தயாரிக்க தொடங்கியிருக்கிறார் சமந்தா. இந்நிலையில், இவர் எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகிவருவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க : எஸ்.ஜே.சூர்யாவின் மைண்ட் வாய்ஸ் இதுதான்.. நகைச்சுவையாக பேசிய சிவகார்த்திகேயன்!
நடிகை சமந்தா ரூத் பிரபு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் இருக்கும் புகைப்படத்தில், நடிகை சமந்தா கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடையில், பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரியும் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. சமந்தாவை பதிவின் கீழ் ரசிகர்கள் கருத்துக்களையும், எமோஜிகளையும் தெறிக்கவிட்டு வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, தற்போது மீண்டும் கதாநாயகியாக களமிறங்க உள்ளார். அதற்கான முன்னோட்டமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தெலுங்கில் ஓ பேபி படத்துக்கு பிறகு நந்தினி ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிரார். இந்தப் படத்தையும் சமந்தாவே தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எகிறும் எதிர்பார்ப்பு.. சாதனைப் படைத்த மதராஸி ட்ரெய்லர்!
நடிகை சமந்தாவின் புதிய திட்டம் :
நடிகை சமந்தா ரூத் பிரபு படங்களில் நடிப்பதை குறைத்து வரும் நிலையில், அவர் ஆண்டிற்கு 1 அல்லது 2 படங்கள் என்ற வரிசையில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிப்பதை தொடர்ந்து தனது தொழில் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திலும் முழு கவனத்தை செலுத்தலாம் என சமந்தா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரின் தயாரிப்பில் வெளியான முதல் படம்தான் சுபம். தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் வெற்றி பெற்றிருந்தது. இதை அடுத்ததாகத்தான் நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.