அனிருத் கூட நான் போட்டி போடுறனா? சாய் அபயங்கர் சொன்ன விசயம்

Sai Abhyankkar : கோலிவுட் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக தற்போது வலம் வருபவர் சாய் அபயங்கர். இவரது ஆல்பம் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என தொடர்ந்து படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அனிருத் கூட நான் போட்டி போடுறனா? சாய் அபயங்கர் சொன்ன விசயம்

சாய் அபயங்கர்

Published: 

20 Sep 2025 13:34 PM

 IST

கோலிவுட் சினிமாவில் தற்போது மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் ஆல்பம் பாடல்களை மட்டுமே வெளியிட்டு வரிசையாக பலப் படங்களில் தற்போது இசையமைத்து வருகிறார். இவரது இசையில் வெளியான ஆல்பம் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இவரை தங்களது படங்களுக்கு இசையமைக்க படக்குழுவினர் வரிசைக்கட்டி காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயது இசையமைப்பாளராக இருக்கும் இவர் முன்னதாக தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் பல்டி படத்தில் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார். அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கும் இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஷேன் நிக்காம் நாயகனான நடித்து வருகிறார். மேலும் சாந்தனு இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன படம் டியூட். இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது இசையில் இந்தப் படத்தில் தற்போது வரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது, இதில் முதலாவதாக வெளியான பாடல் ரசிகர்களிடையே நெகட்டிவான விமர்சனத்தை அதிகமாகப் பெற்றது. அதற்கு காரணம் பாடலின் வரிகள் புரியாத அளவிற்கு பாடலின் பின்னணி இசை உள்ளது என்று விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பின்னணி இசையில் ஒலியை குறைத்து பாடலின் வரிகள் புரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இவர் இந்தப் படம் மட்டும் இன்றி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அனிருத்திற்கும் எனக்கும் போட்டியா – சாய் அபயங்கர்:

இந்த நிலையில் சாய் அபயங்கர் அனிருத்திற்கு போட்டியாக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாய் அபயங்கரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் அனிருத்திற்கு போட்டியாக எல்லாம் இல்லை. அவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார். நான் இப்போதான் வளர்கிறேன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சந்தானத்திற்கு நிஜமாவே அந்த சீன்ல தூக்கம் வந்துட்டு இருந்தது –  சிவா மனசுல சக்தி படத்தின் ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த ஜீவா

இணையத்தில் வைரலாகும் சாய் அபயங்கரின் பேட்டி:

Also Read… லோகா படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இதுதான் –  இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்