காவல்துறைய கதவறவைக்கும் திரில்லர் பாணியில் வெளியானது ரைட் படத்தின் ட்ரெய்லர்
Right Movie Official Trailer : 80 மற்றும் 90களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அருண் பாண்டியன். இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கோலிவுட் சினிமாவில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் பாண்டியன் (Arun Pandian). தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களிலு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் அருண் பாண்டியன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான இணைந்த கைகள், அதிகாரிகள், கோட்டை வாசல், ஊழியன், ராஜ முத்திரை, தாயகம், ரோஜா மலரே, ஆசை தம்பி, உரிமைப் போர், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, வீரநடை, புரட்சிகரன், காற்றுக்கென்ன வேலி, தேவன், தம்பி அர்ஜுனா, விருதகிரி, அன்பிற்கினியாழ், ஆதார், ட்ரிகர் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இறுதியாக நடிகர் அருண் பாண்டியன் நடித்தப் படம் அக்கேனம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அருண் பாண்டியன் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் ரைட். இந்தப் படத்தை சுப்ரமணியம் ரமேஷ் குமார் இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருண் பாண்டியனுடன் இணைந்து நடிகர்கள் நட்டி நடராஜன், அக்ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், வினோதினி, தங்கதுரை, ஆதித்யா, யுவினா, ரோஷன் உதயகுமார், உதய் மகேஷ், முத்துராமன், அசோக் பாண்டியன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.




ரைட் படத்தின் ட்ரெய்லரில் சொல்வது என்ன?
தனது மகனை காணவில்லை என்று அருண் பாண்டியன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். அங்கு உள்ள போலீஸ் அதிகாரிகள் அந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அதே காவல் நிலையத்தில் பெரிய அதிகரியாக நடிகர் நட்டி நடராஜ் பணியாற்றி வருகிறார்.
அந்த காவல் நிலையம் தன்னுடைய கண்ட்ரோலில் உள்ளது என்று சைபர் க்ரைம் நபர் ஒருவர் மிரட்டி வருகிறார். இதில் இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… லோகா படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இதுதான் – இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்
ரைட் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் அதர்வா:
Very happy to release the trailer of #RIGHT 🔥My heartfelt wishes to @iarunpandianc sir , @natty_nataraj sir & the entire cast crew. #Justice
Directed by : #SubramanianRameshKumar
Produced by : @RTS_film@iamAksharaReddy @Roshan_subash… pic.twitter.com/EwedHcQabG
— Atharvaa (@Atharvaamurali) September 18, 2025
Also Read… கிளாசிக் படத்தை ரீமேக் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் தான் நடிப்பேன் – நடிகர் கவின்