கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்

Karuppu Movie Release Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியது வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்

கருப்பு

Published: 

15 Feb 2026 11:22 AM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான ரெட்ரோ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக கருப்பு படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு தொடங்கிய போது படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையில் ஜன நாயகன் படம் வெளியாகும் என்று அறிவித்ததால் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் ஜன நாயகன் காரணமாக படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளர் ஒத்திவைக்க நினைத்ததாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளிப்படையாக பேசியது தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் கருப்பு படம்:

இந்த நிலையில் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது தமிழ் சினிமாவில் வலிமை படத்தின் அப்டேட்டை எப்படி மக்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்களோ அதே போல தற்போது கருப்பு படத்தின் அப்டேட்டை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டது. மேலும் படம் இந்த கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்.ஜே. பாலாஜி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சசிகுமாரை காப்பாற்றுவார்கள்… என்னைக் காப்பாற்ற வரமாட்டார்கள் – வெளிப்படையாக பேசிய எச்.வினோத்!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேசிய வீடியோ:

Also Read… சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?