அடுத்த 5 வருஷத்திற்கான திட்டத்தை ரஜினிகாந்த் என்னிடம் சொன்னார்… ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

RJ Balaji Talks About Rajinikanth: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் பிரபலமாக வலம் வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சமீபத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்தும் அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது

அடுத்த 5 வருஷத்திற்கான திட்டத்தை ரஜினிகாந்த் என்னிடம் சொன்னார்... ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

ஆர்.ஜே.பாலாஜி

Published: 

24 Feb 2026 11:15 AM

 IST

ரேடியோவில் ஆர்ஜேவாக தனது பணியைத் தொடங்கினார் ஆர்.ஜே.பாலாஜி. இவர் ரேடியோவில் ஆர்.ஜேவாக இருக்கும் போதே மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது கலகலப்பான பேச்சு மற்றும் டைமிங் காமெடியால் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வந்தார். இப்படி ஆர்ஜேவாக தனது வாழ்க்கையை கொண்டுசென்று கொண்டிருந்த ஆர்.ஜே. பாலாஜிக்கு சினிமாவில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து காமெடியனாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி அதனைத் தொடர்ந்து படத்தில் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடித்தப் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து படங்களை அவரே இயக்கி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து கருப்பு படத்தை இயக்கி உள்ளார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 வருஷத்திற்கான திட்டத்தை ரஜினிகாந்த் என்னிடம் சொன்னார்:

சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சாரை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எல்லா வகையிலும் ஒரு உண்மையான ஜாம்பவான், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து அவர் என்னிடம் பேசினார். அவர் எடுக்க விரும்பும் படங்கள், அவற்றை அணுகும் விதம், அடுத்த நான்கு திட்டங்கள் குறித்து ஏற்கனவே விவாதித்த இயக்குநர்கள் பற்றி என அனைத்தையும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரது பேச்சைக் கேட்பது மிகவும் ஊக்கமளித்தது. 75 வயதில், அவரது தெளிவான பார்வை, நீண்டகால திட்டமிடல் மற்றும் 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொண்டிருந்த அதே ஆர்வம் ஆகியவை அசாதாரணமானவை என்று ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also Read… இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் உண்மையான ஜாவா சுந்தரேசன் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு:

Also Read… விரைவில் வெளியாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி? ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் தகவல்

அமெரிக்காவில் 90 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
கேமராவில் சிக்கிய அரிய வகை ஃபயர் டைகர் - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி