ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட்டை கொடுத்த படக்குழு
Aan Paavam Pollathathu Movie : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஆண் பாவம் பொல்லாதது படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆண் பாவம் பொல்லாதது
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் ரியோ (Rio). இவர் தொடர்ந்து சீரியலில் நாயகனாக நடித்தார். இவரது நடிப்பில் வெளியான சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் ரியோ ராஜ் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். அதன்படி நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ஸ்வீட் ஹார்ட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து நடிகர்கள் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பணிக்கர், அருணாசலேஸ்வரன் பா, துளசி, ஃபௌஸி, ஆஷிக் கோபிநாத், காத்தாடி ராமமூர்த்தி, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேஷ்மி கார்த்திகேயன், ஆர் ரிது, மைதிலி சத்யஜித், கவிதா சுரேஷ், மகாதேவ் பயக்கல், கவின் ஜி.டி. சாம்பவி குருமூர்த்தி, சுமா, சனா உதயகுமார் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியான பிறகும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரிலீஸ் அப்டேட்:
இந்த நிலையில் ஸ்வீட் ஹார்ட் படத்தை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்தப் படத்தை இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கி உள்ளார். காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரியோவிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மனோஜ் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ட்ரம்ஸ்டிக் புரடெக்ஷன் சார்பாக வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அமேசான் ஓடிடியில் பதறவைக்கும் இந்த த்ரில்லர் படமான எல வீழா பூஞ்சிரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
இணையத்தில் வைரலாகும் ஆண் பாவம் பொல்லாதது படக்குழுவின் வெளியிட்ட பதிவு:
Smiles, fights, and a little fright – OCT 31st theatres la meet pannalam!#AanPaavamPollathathu
Get ready for an emotional and entertaining film ❤️#APP @rio_raj @imalavikamanoj@DrumsticksProd @blacksheepoffl @kalaiyinkural @Music_Siddhu @RjVigneshkanth @ertviji pic.twitter.com/2O3kXgiB54
— Drumsticks Productions (@DrumsticksProd) September 20, 2025
Also Read… ஓவியாவிற்கு பிறகு ரசிகர்களிடையே அதிகம் பிரபலமான பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?