ஜெயம் ரவிக்கும் – ரவி மோகனுக்கும் உள்ள வித்யாசம் என்ன? அவரே சொன்ன விசயம்

the difference between being Jayam Ravi and being Ravi Mohan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது ஜெயம் ரவியாக இருந்ததற்கும் ரவி மோகனாக இருப்பதற்குமான வித்யாசத்தை பேசியது வைரலாகி வருகின்றது.

ஜெயம் ரவிக்கும் - ரவி மோகனுக்கும் உள்ள வித்யாசம் என்ன? அவரே சொன்ன விசயம்

ரவி மோகன்

Published: 

25 Mar 2026 20:43 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இளைய மகன் ரவி மோகன் நாயகனாகவும் மூத்த மகன் மோகன் ராஜா ஒரு இயக்குநராகவும் வலம் வருகின்றனர். அந்த வகையில் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலமாக ரவி மோகன் நாயகனாக அறிமுகம் ஆனார். ரவி என்ற பெயருடன் வந்த அவரை ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனதால் ரசிகர்களும் திரையுலகினரும் ஜெயம் ரவி என்று அழைக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னை ஜெயம் ரவி என்றே அவர் அடையாளப்படுத்திக்கொண்டார். இப்படி இருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரை ஜெயம் ரவி என்று குறிப்பிடுவதை தவிர்த்துவிட்டு ரவி மோகன் என்று அழைக்குமாறு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ரவி மோகன் என்றே அவரை படங்களிலும் பொது நிகழ்வுகளிலும் அழைக்கத் தொடங்கினர். நடிகராக மட்டுமே இருந்த நிலையில் தற்போது சினிமாவில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் புது அவதாரத்தை எடுத்துள்ளார். இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் ரவி மோகன் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயம் ரவிக்கும் – ரவி மோகனுக்கும் உள்ள வித்யாசம் என்ன?

இந்த நிலையில் விழா ஒன்றில் பேசிய நடிகர் ரவி மோகனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், ஜெயம் ரவியிடம் இருந்தது, ஆனால் ரவி மோகனிடம் காண முடியாத அந்தப் பண்பு எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரவி மோகன், பயம் என்று பதிலளித்துள்ளார். மேலும் ஜெயம் ரவியிடம் இல்லாத, ஆனால் ரவி மோகனிடம் இருக்கும் அந்த விஷயம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரவிமோகன் நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ரவி மோகன் ஏழையாகக் கூட நீ இறக்கலாம்; ஆனால், கோழையாக மட்டும் இறக்காதே என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read… Soori: டியூட் பட தயாரிப்பு நிறுவனத்துடன் புது படத்தில் இணைந்த சூரி.. இயக்குநர் யார் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் நடிகர் ரவி மோகனின் பேச்சு:

Also Read… சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..