Ravi Mohan: விஜய் அண்ணாவின் ரசிகனாக அவரின் வெற்றிக்கு எப்போதும் பிரார்த்திக்கிறேன் – ரவி மோகன் பேச்சு!
Ravi Mohans Emotional Speech About Thalapathy Vijay: நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று பேசியிருந்தார், அதில் அவர் தளபதி விஜய்யின் ரசிகனாக அவரின் வெற்றிக்காக எப்போதும் பிராத்தனை செய்வதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் ரவி மோகன்
தென்னிந்திய சினிமாவில் பேமஸ் நடிகர்களில் ஒருவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நாயகனாக நடிக்க, ரவி மோகன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பின் இவ்வாறு வில்லன் வேடத்தில் நடிகர் ரவி மோகன் இந்த பராசக்தி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2025 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த பராசக்தி படகுழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியிருந்தனர். அந்த நிகழ்ச்சியின்போது, ஆங்கில செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரவி மோகன் அதில், தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ரசிகனாக அவரின் வெற்றிக்கு எப்போதும் பிராத்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவராக ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
தளபதி விஜய் குறித்து ரவி மோகன் பேசிய விஷயம் :
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரவி மோகன், “விஜய் அண்ணாவின் ரசிகனாக, நான் எப்போதும் அவரது வெற்றிக்காக, சாத்தியமான எல்லா வழிகளிலும் பிராத்தனை செய்கிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் மற்றும் தனிப்பட்ட முறியிலும் அவரின் தீவிர ரசிகன் என்பதையும் நான் காட்டினேன். அவரது வாழ்க்கையில் இனி எந்த சர்ச்சைகளும், சிக்கல்களும் இருக்கக்கூடாது என நான் எப்போதுமே விரும்புகிறேன் மற்றும் பிரார்த்தனை செய்கிறேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
விஜய் குறித்து நடிகர் ரவி மோகன் பேசிய வீடியோ பதிவு:
“As a @actorvijay Anna’s fan, I’m always praying for his success, in every way possible🤞. In every stage & personally also shown that I’m his ardent fan♥️. I always wish & pray that there are no more controversy & problems in his career🥰”
– #RaviMohanpic.twitter.com/qN8XT94LWh— AmuthaBharathi (@CinemaWithAB) January 15, 2026
நடிகர் ரவி மோகனின் நடிப்பில் பராசக்தி என்ற படம் இறுதியாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக இருந்தாலும், இதில் ரவி மோகனின் கதாபாத்திரம் மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தனது கைவசத்தில் ஜீனி, ப்ரோகோட், கராத்தே பாபு உள்ளிட்ட பல படங்களை வைத்துள்ளார். இப்படம் இந்த 202ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூர்யாவின் ரசிகர்களே.. அதை தவிர்த்து கருப்பு படத்திலிருந்து இனி எந்த அப்டேட்டும் வராது?- ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
இதில் ஜீனி என்ற படத்தில் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் தீவிரமாக இருக்கிறதாம். இப்படம் வரும் 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புது படங்களில் நடிப்பதற்காக கதைகளையும் ரவி மோகன் கேட்டுவருவதாக கூறப்படுகிறது.