Ravi Mohan : இலங்கையில் ரவி மோகன் – கெனீஷா.. வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த சந்திப்பு!

Ravi Mohan Meets Sri Lankan Foreign Minister Vijitha Herath : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரவி மோகன், பாடகி கெனீஷாவுடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இது குறித்த பதிவை அமைச்சர் விஜித ஹெராத் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Ravi Mohan : இலங்கையில் ரவி மோகன் - கெனீஷா.. வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த சந்திப்பு!

விஜித ஹேரத், ரவி மோகன் மற்றும் கெனீசா

Published: 

20 Jul 2025 20:43 PM

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai). பெண் இயக்குநர் கீர்த்திகா உதயநிதியின் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த இடத்தை அடுத்தாக புது புது படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் (Sudha Kongara) பராசக்தி (Parasakthi) படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இலங்கை மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகனும், பாடகி கெனீஷாவும் (keneesha), இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெரதை (Sri Lankan Foreign Minister Vijitha Herath) நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது அவர்கள் இலங்கை உள்ள டூரிஸ்ட் ஸ்பாட் மற்றும் இலங்கையின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெரத் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : லண்டனில் நடக்கும் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா?

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெராத் வெளியிட்ட பதிவு :

அமைச்சர் விஜித ஹெரத் நெகிழ்ச்சி :

இந்த பதிவில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெரத், “பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி மோகன் மற்றும் பிரபல பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஒரு நம்பமுடியாத சந்திப்பு நடந்தது என அவர் அதில் எழுதியுள்ளார். இது தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழகம் மற்றும் இந்தியாவையும் கடந்து நடிகர் ரவி மோகன் மாறும் கெனீஷாவும் இணைந்து இசை கான்சட் நடத்த திட்டமிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : இட்லி கடை மற்றும் தலைவன் தலைவி ஒரே கதையா? விளக்கம் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

நடிகர் ரவி மோகனின் புதிய படங்கள் :

பராசக்தி படத்தை அடுத்ததாக நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பிலும், நடிப்பிலும் ப்ரோ கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரவி மோகனுடன், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவையும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாரா. இப்படத்தை அடுத்ததாக ரவி மோகனின் நடிப்பில் ஜின், கராத்தே பாபு போன்ற படங்கள் உருவாகிவருகிறது.மேலும் தனி ஒருவன் 2 படமும் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.