Rashmika Mandanna: 8 ஆண்டுக்கு முந்தைய தனிப்பட்ட உரையாடல்… நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை – ராஷ்மிகா மந்தனா அதிரடி!

Rashmika Mandanna Viral Statement: ராஷ்மிகா மந்தனா பற்றிய தவறான கருத்துக்களை தற்போது இணையத்தில் பரப்பப்பட்டுவரும் நிலையில், தற்போது அது குறித்து மனம் திறந்துள்ளார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகர் ஒருவருடன் நடந்த உரையாடல் வைரலாகிவரும் நிலையில், அது குறித்து ராஷ்மிகா அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.

Rashmika Mandanna: 8 ஆண்டுக்கு முந்தைய தனிப்பட்ட உரையாடல்... நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை - ராஷ்மிகா மந்தனா அதிரடி!

ராஷ்மிகா மந்தனா

Updated On: 

12 Mar 2026 21:42 PM

 IST

தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) . இவர் தற்போது தொடர்ந்து புது புது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். அந்த விதத்தில் கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியில், தனது நண்பரும், நீண்டநாள் காதலருமான விஜய் தேவரகொண்டாவை (Vijay Deverakonda) திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்த நிலையில், மக்கள் மத்தியில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியானதும் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர். அந்த வகையில் 8 ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகருடன் நடிகை ராஷ்மிகாவிற்கு பிரபல நடிகர் ஒருவருடன் நிச்சயம் நடந்தது. பின் சில காரணங்களால் அந்த திருமணம் நடக்கவில்லை. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து தனது இல்லறவாழ்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயம் செய்யப்பட்ட நடிகர் ஒருவருடன், ராஷ்மிகாவின் தாய் பேசுவதும், அந்த நடிகரின் குடும்பம் ராஷ்மிகாவை நடிப்பிலிருந்து விலகச் சொன்னதும் போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகிப்பரவிவருகிறது. இந்நிலையில் அதை 24 மணி நேரத்திற்குள் நீக்கா விட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எனக்கும் அந்த மாதிரி படம் நடிக்கவேண்டும் என அதிக ஆசை.. ஆனால் – கென் கருணாஸ் ஓபன் டாக்!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட அதிரடி எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா, “இணையதளத்தில் மற்றும் ஊடகங்ககளில் என்னை பற்றிய தவறான கருத்து பரப்புவதும், என்னை டார்கெட் செய்து பழிவாங்கிவது போன்ற செயல்களை செய்யத்தொடங்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் சொல்லாத பல விஷயங்களை சித்தரித்து, வெளிப்படுத்துவதையும் நான் பார்த்துக்கொண்டே வருகிறேன். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் இந்த விஷயங்கள் எல்லை தாண்டி நடக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன் எனது தனிப்பட்ட உரையாடல் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்டு, பரப்பப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: தனுஷுடன் புது படத்தில் ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை? – அட இவர்தான்!

இதில் தற்போது மற்றவர்களும் இழுக்கப்படும் நிலையில் இனி மௌனமாக இருக்கமுடியாது. பரவிவரும் ஆடியோவில், சிறிய உரையாடல் நீக்கப்பட்டு, சங்கடம் தரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ஊடகங்கள், இணையவாசிகள் இதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு நீக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அவர் அதில் அதிரசடியாக தெரிவித்துள்ளார்.

Follow Us
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..