Rashmika Mandanna: நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயம் முடிந்துவிட்டதா? ரசிகரின் கேள்விக்கு ரஷ்மிகாவின் நச் பதில்
Rashmika Mandanna Abour Her Engagement: பான் இந்திய கதாநாயகிகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டவை நிச்சயம் செய்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அது பற்றி கூறியுள்ளார்

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) கன்னட சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தெலுங்கு மக்களால் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ப்ரிட் போன்ற படங்களில் மூலம் கொண்டாடப்பட்டார். இவர் தற்போது நேஷனல் க்ரஷ் (National Crush) நடிகையாக இருந்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக இந்தியில் தம்மா (Thama) என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தில் இவர் அதிரடி ஆக்ஷ்ன் நாயகியாக நடித்திருந்தார். இப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்றே கூறலாம். இந்நிலையில் இவருக்கு சினிமாவில் பொருத்தமான இணையாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவர்கள் இருவரும் சினிமாவில் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக சுற்றிவருவது போன்ற பலவேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
அந்த வகையில் இவர்கள் இருவரும் சமீபத்தில், அவர்களின் இல்லத்தில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகிவந்தது. மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நிச்சயதார்த்த மோதிரத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில், இதை மக்கள் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend) படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சில் ரசிகர் ஒருவர் இவரின் நிச்சயம் குறித்த கேள்வியை எழுப்பினர். அதற்கு நடிகர் ராஷ்மிகா மந்தனாவும் சிறப்பான பதிலை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக நுழைந்த திவ்யா கணேஷ் – வைரலாகும் வீடியோ!
விஜய் தேவரகொண்டவுடன் நிச்சயதார்த்தம் தொடர்பான கேள்விக்கு ராஷ்மிகா மந்தனாவின் பதில் :
அந்த நிகழ்ச்சியின்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் நிச்சயதார்த்தம் தொடர்பான கேள்வியை எழுப்பினார், அந்த கேள்வியை எழுப்பியதும் ரசிகர்கள் கூட்டம் அலற தொடங்கியது. இதற்கு அந்த மேடையில் பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, முதலில் இந்த கேள்வியை தவிர்க்கும் விதத்தில் சமாளித்தார். பின் அவர், ” நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சரியான நேரம் வரும்போது, நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்” என அவர் அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: எனக்கு தனுஷ் எதிரியா? அதில் மட்டும்தான் அவர் எனக்கு போட்டி- சிலம்பரசன் பகிர்ந்த விஷயம்!
நிச்சயம் குறித்து ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ :
#RashmikaMandanna about her engagement with #VijayDevarakonda
– At the correct time, I will update You all.pic.twitter.com/ARlsomOHUA
— Movie Tamil (@_MovieTamil) October 28, 2025
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 2 படங்களில் இணைந்து நடித்திருந்த நிலையில், அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 6 வருடங்ககளுக்கும் மேல் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் வெகு விரைவில் ரியல் ஜோடியாக மாறவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.