Peddi: ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் அப்டேட்!

Peddi Movie Trailer Update: தென்னிந்திய சினிமாவில் மெகாஸ்டாராக மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் 16வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் பெத்தி. இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Peddi: ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? - வைரலாகும் அப்டேட்!

பெத்தி படத்தின் டிரெய்லர்

Updated On: 

09 May 2026 19:09 PM

 IST

நடிகர் ராம் சரணின் (Ram Charan) நடிப்பில் பல படங்கள் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் ரங்கஸ்தலம் பட இயக்குநர் புச்சி பாபு சனாவின் (Buchi Babu Sana) இயக்கத்தில் மீண்டும், அவர் நடித்துள்ள திரைப்படம்தான் பெத்தி (Peddi). இந்த படத்தில் ராம் சரண் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிர்டுந்தார். அந்த வகையில் இவர் ராம் சரணுடன் பெத்தி படத்தில் நாயகியாக நடித்து, இரண்டாவது முறையாக தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெத்தி படமானது கடந்த 2026 மார்ச் மாதத்திலே வெளியாகவேண்டியது, படத்தின் ஷூட்டிங் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் என படக்குழு புது ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸை பெரிய நிகழ்வாக கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது, நிகழ்ச்சி எப்போது நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களே தயாரா? கருப்பு படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடக்கம் தெரியுமா?

ராம் சரணின் பெத்தி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது:

இந்த பெத்தி படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த படமானது மல்யுத்தம் மற்றும் ஒரு ஆக்ஷன் ஹீரோவின் மாற்றம் பற்றிய பொழுதுபோக்கு கமர்ஷியல் படமாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸை படக்குழு பெரிய நிகழ்ச்சியாக நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது வரும் 2026 மே 16ம் தேதியில், குஜராத்தில் உள்ள போபால் என்ற இடத்தில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியும் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்

இந்த படத்தில் ராம் சரண், ஜான்வி கபூருடன் நடிகர்கள் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து, போமன் இரானி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இதில் தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு பாடல் ஒன்றில், ராம் சரணுடன் இணைந்து நடனமாடியுள்ளார். மேலும் இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறிய கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி