Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2 காட்சிகள்.. படக்குழு உடனடியாக எடுத்த முடிவு!

Jailer 2 Leaked Video: 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் படம்தான் ஜெயிலர் 2. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துவரும் நிலையில், இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. அதற்கு படக்குழு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2 காட்சிகள்.. படக்குழு உடனடியாக எடுத்த முடிவு!

ஜெயிலர் 2 படம்

Updated On: 

17 Apr 2026 15:38 PM

 IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) 172வது திரைப்படமாக தயாராகிவருவதுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருடன் இணைந்து பான் இந்திய நடிகர்களும் நடித்துவருகிறார். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 என்ற படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கிவரும் நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, சிவராஜ்குமார், மோகன்லால், பவன் கல்யாண் என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் 1 ஆண்டுக்கும் மேலாக இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காட்சியை யாரோ நபர் ஒருவர் தனது போனில் வீடியோ எடுத்து இணையத்தில் லீக் செய்துள்ளார். இதை உடனடியாக தடுக்கும் விதத்தில் படக்குழு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் படமான மிஸ்டர் எக்ஸ் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ!

ஜெயிலர் 2 படத்தின் காட்சிகள் லீக் குறித்து படக்குழு எச்சரிக்கை :

சமீபத்தில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படமானது முழுவதுமாக இணையத்தில் கசிந்திருந்த நிலையில், ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தின் காட்சிகள் சில இணையத்தில் கசிந்துள்ளதாம். இதை உடனடியாக பார்த்த படக்குழு, வீடியோவை நீக்காவிட்டால் கடும் நடவெடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: அரசன் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் அமீர் மற்றும் கிஷோர் – வைரலாகும் போட்டோ

அந்த வகையில் இப்படத்தின் காட்சிகள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோலவே தளபதி விஜய்யின் ஜன நாயகன் படக்குழுவும் உடனடியாக நடவெடிக்கை எடுத்திருந்தால், ஜன நாயகன் படமும் முழுவதுமாக இணையத்தில் லீக் ஆகியிருக்காது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஜெயிலர் 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதாகியும் இன்னும் நிறைவடையவில்லை. இப்படமானது வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
பாடகி கேஎஸ் சித்ரா தனது மகளை பற்றி பகிர்ந்த பதிவு.. உடன் அன்பை பகிர்ந்த பாடகர்கள்..
கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - 30 நிமிடங்களில் வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்பு
பெட்ரோலுக்கு ரூ.18 இழப்பு, டீசலுக்கு ரூ. 35 இழப்பு - நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈரானுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் நிறுத்தம் - அமெரிக்கா கடும் நடவடிக்கை