ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Jailer 2 Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஜெயிலர் 2

Updated On: 

24 Sep 2025 14:06 PM

 IST

சினிமாவில் 50 வருடங்களை கடந்து தற்போதும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இளைம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth). இவரது நடிப்பில் சமீபத்தில் கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது  குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு முன்னதாகவே அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தின் வெளியீட்டிற்கு பிறகு விறுவிறுப்பாக ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கேரளாவிற்கு சென்றார். அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்டை கொடுத்த ரஜினிகாந்த்:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அளித்தப் பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஜெயிலர் 2 படம் வருகின்ற 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்து இருப்பார். இவர் தனது ஓய்வு காலத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்துக்கொண்டிருக்கும் போது போலீசாக இருக்கும் அவரின் மகன் கொலை செய்யப்பட்டதாக செய்தி வருகின்றது. அவர்களை பழிவாங்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்து செல்லும் போது மகன் உயிருடன் இருப்பது தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து அவரது மகனை காப்பாற்ற ரஜினிகாந்த் போராடி வரும் நிலையில் தனது மகனும் தவறு செய்தவர் என்பனை அறிகிறார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் என்ன செய்யப்போகிறார் என்பது இரண்டாம் பாகத்தில் தெரியவரும். அதனை பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… கைதி 2 படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? வைரலாகும் தகவல்

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பூஜையுடன் தொடங்கியது மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ஷூட்டிங்

Follow Us
Related Stories
Trisha Krishnan: சினிமாவிலிருந்து விலகிவிட்டேனா? தொழிலதிபரை திருமணம் செய்து நான்கு குழந்தை- விமர்சனங்களுக்கு திரிஷா போட்ட பதிவு!
Allu Arjun: அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் AA22xA6 பட டைட்டில் போஸ்டர் – படக்குழு அறிவிப்பு!
தேர்தல் முடியும்வரை.. TN2026 பட ரிலீஸை நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? சீரியல் நடிகை டூ சினிமா நடிகையானவர் இவர்!
Prabhu Deva: எளிமையான கிராம வாழ்க்கையை விரும்பும் பிரபு தேவா – அவரே வெளியிட்ட வீடியோவை பாருங்க!
AA22 Movie: அட்லீ – அல்லு அர்ஜுனின் AA22xA6.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்