ஷௌபின் ஷாகிர் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்: யார் இவர் தெரியுமா?

Actor Soubin Shahir: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கூலி படத்தின் பான் இந்திய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒரு நடிகர் இந்தப் படத்தில் நடிப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷௌபின் ஷாகிர் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்: யார் இவர் தெரியுமா?

ஷௌபின் ஷாகிர், ரஜினிகாந்த்

Published: 

13 Aug 2025 17:17 PM

சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்ற கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) பேசியிருந்தார். அதில் நடிகர் சௌபின் ஷாகிர் (Actor Soubin Shahir) குறித்து ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் கூறியது என்ன என்றால் முதலில் கூலி படத்தில் சௌபின் ஷாகிர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தில் என்னுடன் முந்தைய படத்தில் நடித்த நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம். அது வேறு யாரும் இல்லை ஃபகத் பாசில் தான். ஆனால் லோகேஷ் அவரிடம் பேசியபோது அவருக்கு டேட்ஸ் இல்லாத காரணத்தால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

அவருக்கு பதில் லோகேஷ் யாரை நடிக்க வைக்க முடிவு செய்வார் என்று யோசித்தேன். அப்போது சௌபின் ஷாகிர் குறித்து கூறினார். நான் முதலில் பார்த்துட்டு இவரா? இவரால அந்த கதாப்பாத்திரத்தை பண்ண முடியுமா என்று கேட்டேன். உடனே லோகேஷ் கனகராஜ் சார் மிகவும் அருமையான நடிகர் சூப்பரா பண்ணுவார் என்று தெரிவித்தார். அப்போது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. பிறகு ஷூட்டிங் தொடங்கி மூன்று நாட்களுக்கு என்னை அழைக்கவில்லை. பிறகு நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோது சௌபினின் காட்சிகளை லோகேஷ் மிகவும் தீவிரமாக படமாக்கிக் கொண்டு இருந்தார். பிறகு எனக்கு சௌபினின் காட்சிகளைக் காட்டினார். பார்த்து மிரண்டுவிட்டேன் என்ன இப்படி நடித்துள்ளார் என்று சௌபினின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

மலையாளத்தில் அசத்தல் நடிகராக இருக்கும் சௌபின் ஷாகிர்:

கடந்த 1992-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு ஃபகத் பாசில் நாயகனாக அறிமுகம் ஆன கையத்தும் தூரத்து படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார் நடிகர் சௌபின் சாகிர் தொடர்ந்து படங்களில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்வது போல மலையால சினிமாவில் சௌபின் ஷாகிர் கொடுக்கப்படும் கதாப்பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து முடிப்பார். அதன்படி அம்பிலி படத்தில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நபராக நடித்து கலக்கிய நடிகர் சௌபின் பிறகு மம்முட்டி நடிப்பில் வெளியான பீஷ்ம பர்வம் படத்தின் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… சினிமாவில் நல்லவனா நடிச்சு நடிச்சு போர் அடிக்குது – நடிகர் நாகர்ஜுனா

நடிகர் சௌபின் ஷாகிரின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு:

Also Read… Nagarjuna : கூலி படம் 100 பாட்ஷாவுக்கு சமம்.. லோகேஷ் கனகராஜை புகழ்ந்த நாகார்ஜுனா!