Coolie: ரசிகர்களின் வேண்டுகோள்.. ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் டைட்டில் மாற்றம்!

Rajinikanth Coolie Movie Hindi Title Changed : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக கலக்கி வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் விரைவில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் கூலி. இந்த படத்தின் இந்தி டைட்டில் மஜதூர் என்று வைக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளிற்கு ஏற்ப படக்குழு டைட்டிலை மாற்றியுள்ளது.

Coolie: ரசிகர்களின் வேண்டுகோள்.. ரஜினிகாந்தின் கூலி படத்தின் டைட்டில் மாற்றம்!

ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம்

Published: 

27 Jun 2025 11:30 AM

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) முன்னணி இயக்கத்தில், மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். இவரின் 171வது திரைப்படமான கூலி, கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து கடந்த 2025, மார்ச் மாதத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மகள் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) நடித்துள்ளார். கமல் ஹாசனின் மகளான இவர், ரஜினிகாந்துடன் இணையும் முதல் படமாக இந்த கூலி அமைந்துள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனமானது தயாரித்துள்ளது .

மேலும் அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தமிழில் கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டாலும், இந்தியில் கூலி என்ற பெயரில் 2 படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஆரம்பத்தில் இந்தியில் ‘மஜதூர்’ (Maja Door) என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளிற்கு ஏற்ப படக்குழு தற்போது இப்படத்தின் இந்தி டைட்டிலை மாற்றியுள்ளது. இப்படத்திற்கு இந்தியில் “கூலி தி பவர் ஹவுஸ்” (Coolie The Power House) என்ற டைட்டிலை படக்குழு வைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தின் கூலி பட இந்தி டைட்டில் தொடர்பாக படக்குழு வெளியிட்ட பதிவு :

ரஜினிகாந்தின் கூலி ரிலீஸ் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ், ஷோபின் சாஹிர் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தமிழ் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

பான் இந்திய பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படமானது, வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

கூலி திரைப்படத்தின் கதைக்களம் :

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் படங்களை பற்றி சொல்லவே வேண்டாம், நிச்சயமாக அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் நிரம்பித்தான் இருக்கும். இந்த படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்ற ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த் படத்தில் நெகடிவ் ரோலில் நாகார்ஜுனா மற்றும் அமீர்கான் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

மேலும் இப்படத்தின் கதைக்களமும் கடத்தல் தொடர்பான கதைக்களத்துடன் இருக்கும் என்று கூறப்படுகிறது.  கூலி படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.