பூக்கி படத்திலிருந்து வெளியானது புடிக்கலே புடிக்கலே வீடியோ பாடல்

Pudikaley Pudikaley Video Song | இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் பூக்கி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து புடிக்கலே என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

பூக்கி படத்திலிருந்து வெளியானது புடிக்கலே புடிக்கலே வீடியோ பாடல்

பூக்கி பட பாடல்

Published: 

05 Feb 2026 14:27 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது போல அறிமுக நடிகர்களின் படங்களும் தற்போதைய இளைஞர்களின் படங்களும் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது என்றே சொல்லலாம். அதன்படி நடிகர் யாராக இருந்தாலும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் அதனை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜய் திஷன் மார்கன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இதில் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இருந்தாலும் அஜய் திஷன் கதாப்பாத்திரம் மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜய் திஷன் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் பூக்கி.

பூக்கி என்பது தற்போது 2கே கிட்ஸ்களிடையே அதிகம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகும். அதாவது தனக்கு மிகவும் பிடித்த ஆண் அல்லது பெண்ணை பூக்கி என்று அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் தற்போதையை இளைஞர்களின் காதலை மையமாக வைத்து உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூக்கி படத்திலிருந்து வெளியானது புடிக்கலே புடிக்கலே வீடியோ பாடல்:

இயக்குநர் கணேஷ் சந்திரா எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது புடிக்கலே புடிக்கலே என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை லவரதன் எழுதியுள்ள நிலையில் பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரன், ருக்சர் பந்துகியா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தெலுங்கு சினிமாவில் ரோம்-காம் வெளியான பாணியில் குஷியை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

பூக்கி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மகளுக்காக பழி வாங்கும் சரத்குமார்… வைரலாகும் சரத்குமாரின் ஆழி படத்தின் டீசர் 

‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்